Home சினிமா செய்திகள் நானே வருவேன் விமர்சனம் : Naane Varuven Review: ஹாரர் கலந்த ஆளவந்தான்.. தனுஷின் நானே வருவேன் விமர்சனம்! | Naane Varuven Movie Review in Tamil

நானே வருவேன் விமர்சனம் : Naane Varuven Review: ஹாரர் கலந்த ஆளவந்தான்.. தனுஷின் நானே வருவேன் விமர்சனம்! | Naane Varuven Movie Review in Tamil

0
நானே வருவேன் விமர்சனம் : Naane Varuven Review: ஹாரர் கலந்த ஆளவந்தான்.. தனுஷின் நானே வருவேன் விமர்சனம்! | Naane Varuven Movie Review in Tamil

ஆளவந்தான் கதை

ஆளவந்தான் கதை

தாணு தயாரிப்பில் கமல் நடித்த ஆளவந்தான் படத்தை தனுஷை வைத்து பேய் படமாக எடுத்தால் எப்படி இருக்குமோ? அப்படி மிரட்டுகிறது நானே வருவேன் திரைப்படம். ஆளவந்தான் படமே அப்போ வராமல் இப்போ வெளியாகி இருந்தால் ஓடியிருக்கும் என ஏகப்பட்ட ரசிகர்கள் சொன்ன நிலையில், அப்படியொரு படத்தையே இயக்கி இருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

திரைக்கதை

திரைக்கதை

திரைக்கதை பிரபு, கதிர் என ட்வின்ஸ் அப்பா அம்மாவுடன் வாழ்ந்து வருகின்றனர். சின்ன வயசுலேயே பழுத்த பிஞ்சாக பெண் ஒருவருடைய பாவாடையை கதிர் தனுஷ் எரிக்கிறார்.. அதற்காக அவரது அம்மா அப்பா அடித்து ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வைக்கின்றனர். பின்னர் ஹண்டர் போல வரும் செல்வராகவன் உடன் சகவாசம் கொள்கிறார் கதிர். அங்கே இருந்து கட் பண்ணா, பல ஆண்டுகள் கழித்து பெரிய தனுஷாக பிரபு தனது மனைவி இந்துஜா மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது மகளுக்கு ஏதோ அமானுஷ்ய குரல்கள் கேட்பது படத்தை ஹாரர் படமாக மாற்றுகிறது.

நடிப்பு அசுரன்

நடிப்பு அசுரன்

மகள் மூலமாக நடக்கும் விஷயத்தில் அண்ணன் தனுஷ் கதிர் பற்றிய கதையும் அவன் சொந்த குடும்பத்துக்கே பண்ண கொடூரத்தையும் புரிந்து கொள்ளும் தம்பி பிரபு (தனுஷ்) தனது மகளையும் அண்ணன் தனுஷிடம் சிக்கிக் கொண்டிருக்கும் கதிரின் மகனையும் காப்பாற்ற போராடும் முயற்சி கை கொடுத்ததா? இல்லையா? என்பது தான் கிளைமேக்ஸ். டபுள் ஆக்‌ஷனில் தனுஷ் நடிப்பில் மிரட்டி எடுத்துள்ளார்.

ஹாலிவுட் ஸ்டைல் ஹாரர்

ஹாலிவுட் ஸ்டைல் ஹாரர்

ஆளவந்தான் படத்தில் ஹாரர் கலந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த படமும் இருக்கிறது. காஞ்சனா ஸ்டைல் காமெடி ஹாரர் படமாக இல்லாமல் காஞ்சரிங் ஸ்டைலில் பக்காவான ஹாலிவுட் ஸ்டைல் ஹாரர் படமாக செல்வா இயக்கி இருப்பது பாராட்டுக்களை அள்ளுகிறது. வழக்கமான அண்ணன் தம்பி பழிவாங்கல் கதையில் அமானுஷ்யத்தை அளவாக பயன்படுத்தி இருப்பது ஆறுதல்.

பிளஸ்

பிளஸ்

இயக்குநர் செல்வராகவனின் ஸ்டைலிஷ் ஹாரர் மேக்கிங், தனுஷின் வெறித்தனமான நடிப்பு மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பிஜிஎம் முதல் பாதியை படு வேகமாக நகர்த்திச் சென்றது. 2 மணி நேரம் 2 நிமிடம் மட்டுமே படத்தின் நீளம் என்பது இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறி உள்ளது. பிரபுவின் மனைவியாக வரும் இந்துஜா, கதிரின் மனைவியாக ஊமைப் பெண்ணாக நடித்துள்ள எல்லி ஆவ்ரம், செல்வராகவன் என குறைவான நடிகர்கள் குறைவான காட்சிகளிலேயே வந்தாலும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

மைனஸ்

மைனஸ்

கதிர் ஏன் இவ்வளவு கெட்டவனாக இருக்கிறார் என்பதற்கு எந்தவொரு வலுவான பின் கதையையும் சொல்லவில்லை. அதே போல படத்தின் கிளைமேக்ஸை அப்படி முடித்தது பல ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. கெஸ் பண்ணுவதை போலவே அடுத்தடுத்து நகரும் காட்சிகள் பெரிய மைனஸ். ஆனால், தனுஷின் நடிப்புக்காகவும் என்கேஜிங் ஆன ஸ்க்ரீன் பிளேவுக்காகவும் தாராளமாக ஒருமுறை இந்த படத்தை தியேட்டரில் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here