Home Sports விளையாட்டு செய்திகள் நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு: ரஹானே கேப்டன்: முக்கிய வீரர்கள் இல்லை | Rohit, Pant, Bumrah and Shami to sit out Test series against New Zealand

நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு: ரஹானே கேப்டன்: முக்கிய வீரர்கள் இல்லை | Rohit, Pant, Bumrah and Shami to sit out Test series against New Zealand

0
நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு: ரஹானே கேப்டன்: முக்கிய வீரர்கள் இல்லை | Rohit, Pant, Bumrah and Shami to sit out Test series against New Zealand

[ad_1]


நியூஸிலாந்து அணியுடன் நடக்க உள்ள 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக் குழு நேற்று அறிவித்துள்ளது.

இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்படவில்லை. கேப்டனாக அஜிங்கியே ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார், 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அணியில் இணைவார் என மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர்கள் ஏன் இடம் பெறவில்லை என்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

மும்பையில் டிசம்பர் 3 முதல் 7 வரை நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியி்ல் கேப்டன் விராட் கோலி அணியில் இணைந்து அணியை வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கான்பூரில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் ரஹானே கேப்டனாகவும், புஜாரா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டி20 போட்டியிலும் இடம்பெறாத ஷர்துல் தாக்கூர் டெஸ்ட் தொடருக்கும் தேர்வு செய்யப்படவில்லை. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா இல்லாத நிலையில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் அல்லது ஷுப்மான் கில் களமிறங்கக்கூடும்.

டெஸ்ட் போட்டிக்கு முதல்முறையாக ஸ்ரேயாஸ் அய்யர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடுவரிசைக்கு பலம் சேர்க்கும் ஹனுமா விஹார் தொடருக்குச் சேர்க்கப்படவில்லை. அதற்கு காரணத்தையும் பிசிசிஐ தெரிவிக்கவில்லை. ஆனால், தென் ஆப்பிரிக்க செல்லும்இந்திய –ஏ அணியில் விஹாரி சேர்க்கப்பட்டதால், டெஸ்ட் தொடரில் வாய்ப்புப் பெறவில்லை.

ரிஷப் பந்த் இல்லாத நிலையில் விருதிமான் சாஹா, ஆந்திரா விக்கெட் கீபப்ர் கே.எஸ்.பரத் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல்தரப்போட்டிகளில் பரத் 78 போட்டிகளில் 4,283 ரன்கள் குவித்துள்ளதையடுத்து வாய்ப்புப் பெற்றுள்ளார். இதில் 9 சதங்களை அடித்த பரத் 2015ம் ஆண்டில் கோவாஅணிக்கு எதிராக முச்சதம் அடித்து 305 ரன்கள்விளாசினார்.

வேகப்பந்துவீச்சில் டெஸ்ட் போட்டிக்கு பிரசித் கிருஷ்ணா அறிமுகமாகிறார். வேகப்பந்துவீச்சில் பும்ரா, ஷமி இல்லாத நிலையில் இசாந்த் சர்மா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுழற்பந்துவீச்சுக்கு ரவிச்சந்திர அஸ்வின், அக்ஸர் படேல், ஜெயந்த் யாதவ், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் உள்ளனர்.

இந்திய அணி விவரம்:

அஜின்கயே ரஹானே(கேப்டன்), சத்தீஸ்வர் புஜாரா(துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், விருதிமான் சாஹா, கே.எஸ்.பரத், ஸ்ரேயாஸ் அய்யர், ரவிசந்திர அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா: 2-வது போட்டியில் விராட் கோலி இணைவார்.



[ad_2]

Source link

www.hindutamil.in

செய்திப்பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here