Home தமிழ் News ஆட்டோமொபைல் நைன்டி ஒன் மெராகி எஸ்7 விற்பனைக்கு அறிமுகம்… அட்டகாசமான இந்த இ-சைக்கிளின் விலை எவ்வளவு தெரியுமா?

நைன்டி ஒன் மெராகி எஸ்7 விற்பனைக்கு அறிமுகம்… அட்டகாசமான இந்த இ-சைக்கிளின் விலை எவ்வளவு தெரியுமா?

0
நைன்டி ஒன் மெராகி எஸ்7 விற்பனைக்கு அறிமுகம்… அட்டகாசமான இந்த இ-சைக்கிளின் விலை எவ்வளவு தெரியுமா?

[ad_1]

நைன்டி ஒன் மெராகி எஸ்7 விற்பனைக்கு அறிமுகம்... அட்டகாசமான இந்த இ-சைக்கிளின் விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் சைக்கிள் பிராண்டுகளில் நைன்டி ஒன் சைக்கிள்ஸ் (Ninety One Cycles) நிறுவனமும் ஒன்றாகும். இந்நிறுவனம் முன்னதாக மெராகி இ-சைக்கிள் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதுவே நிறுவனத்தின் முதல் இ-சைக்கிள் ஆகும். இதன் அறிமுகம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் அரங்கேற்றப்பட்டது.

நைன்டி ஒன் மெராகி எஸ்7 விற்பனைக்கு அறிமுகம்... அட்டகாசமான இந்த இ-சைக்கிளின் விலை எவ்வளவு தெரியுமா?

இதனைத் தொடர்ந்து நிறுவனம் தற்போது இரண்டாவது இ-பைக்கை (e-bike) நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மெராகி எஸ்7 (Meraki S7) எனும் புதுமுக இ-மிதிவண்டியையே நிறுவனம் தற்போது நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 34,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நைன்டி ஒன் மெராகி எஸ்7 விற்பனைக்கு அறிமுகம்... அட்டகாசமான இந்த இ-சைக்கிளின் விலை எவ்வளவு தெரியுமா?

இந்த உச்சபட்ச விலையிலேயே நைன்டி ஒன் மெராகி எஸ்7 எலெக்ட்ரிக் சைக்கிள் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. மிக அதிக சிறப்பம்சங்களை இ-சைக்கிள் கொண்டிருப்பதனாலேயே இத்தகைய உச்சபட்ச விலையில் மெராகி எஸ்7 விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஷிமனோ டூர்னி 7 ஸ்பீடு கியர் செட், 5 மோட் பெடல் அசிஸ்ட் மற்றும் ஸ்மார்ட் எல்சிடி திரை உள்ளிட்டவை மெராகி எஸ்7 இல் கொடுக்கப்பட்டுள்ளன.

நைன்டி ஒன் மெராகி எஸ்7 விற்பனைக்கு அறிமுகம்... அட்டகாசமான இந்த இ-சைக்கிளின் விலை எவ்வளவு தெரியுமா?

இதுமட்டுமின்றி, இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளையும் இது கொண்டிருக்கின்றது. குறிப்பாக கம்ஃபோர்டான ரைடிங் அனுபவத்தை வழங்குகின்ற வகையில் பன்முக அம்சங்களை அது கொண்டிருக்கின்றது. மிருதுவான இருக்கை, சிறந்த ஹேண்ட்லிங் அனுபவத்தை வழங்குகின்ற வகையில் ஹேண்டில் பார் மற்றும் கிரிப் உள்ளிட்டவைக் கொடுக்கப்பட்டுள்ளன.

நைன்டி ஒன் மெராகி எஸ்7 விற்பனைக்கு அறிமுகம்... அட்டகாசமான இந்த இ-சைக்கிளின் விலை எவ்வளவு தெரியுமா?

இவற்றுடன், அதிக பாதுகாப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையில் 160 மிமீ டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி மிக சிறப்பான இயக்க அனுபவத்தை வழங்குவதற்காக டிராக்சன் நைலான் டயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் சேர்ந்து மிக சிறப்பான ரைடிங் மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும்.

நைன்டி ஒன் மெராகி எஸ்7 விற்பனைக்கு அறிமுகம்... அட்டகாசமான இந்த இ-சைக்கிளின் விலை எவ்வளவு தெரியுமா?

இந்த இ-சைக்கிளை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 35 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். நகர்புற பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே இந்த இ-சைக்கிள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவேதான் இத்தகைய குறைவான ரேஞ்ஜ் திறன் கொடுக்கும் வகையில் அது காட்சியளிக்கின்றது.

நைன்டி ஒன் மெராகி எஸ்7 விற்பனைக்கு அறிமுகம்... அட்டகாசமான இந்த இ-சைக்கிளின் விலை எவ்வளவு தெரியுமா?

இந்த ரேஞ்ஜ் திறனுக்காக பானசோனிக் செல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது ஓர் 6.36AH லித்தியம் அயன் பேட்டரி ஆகும். இத்துடன், ஹை-டார்க் வழங்கக் கூடிய 250 வாட், பிஎல்டிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பின் வீலுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

நைன்டி ஒன் மெராகி எஸ்7 விற்பனைக்கு அறிமுகம்... அட்டகாசமான இந்த இ-சைக்கிளின் விலை எவ்வளவு தெரியுமா?

இ-சைக்கிளின் பேட்டரிகள் ஐபி65 தர அலுமினியத்தால் மூடப்பட்டிருக்கும். இதனை தனியாக கழட்ட முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், சைக்கிளை ஹை-டென்சைல் கார்பன் ரோபோட்டிக் டிக் வெல்டிங்கால் கட்டமைத்திருக்கின்றது. தொடர்ந்து, 80 மிமீ நைன்டி ஒன் சஸ்பென்ஷன் இ-சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here