Home சினிமா செய்திகள் படப்பிடிப்புத் தளத்தில் மயங்கி விழுந்த தீபிகா படுகோன்… இப்போது எப்படியிருக்கிறார்? | Deepika Padukone Rushed To Hospital After Increased Heartrate

படப்பிடிப்புத் தளத்தில் மயங்கி விழுந்த தீபிகா படுகோன்… இப்போது எப்படியிருக்கிறார்? | Deepika Padukone Rushed To Hospital After Increased Heartrate

0
படப்பிடிப்புத் தளத்தில் மயங்கி விழுந்த தீபிகா படுகோன்… இப்போது எப்படியிருக்கிறார்? | Deepika Padukone Rushed To Hospital After Increased Heartrate

[ad_1]

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் ‘புரொஜெக்ட் கே’ என்னும் படத்தில் பிரபாஸின் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த தீபிகா படுகோனுக்குத் திடீரென இதயத்துடிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த படக்குழுவினர் உடனே தீபிகாவை அருகில் இருந்த காமினேனி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

உடற்பயிற்சி, விளையாட்டு என பிட்டாக இருக்கும் தீபிகா படுகோன், இவ்வாறு மயங்கி விழுந்தது ரசிகர்கள் மற்றும் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தச் செய்தி வெளியானதும் தீபிகா படுகோனின் உடல்நிலை குறித்துத் தவறான தகவல்கள் பரவத் தொடங்கின.

“ஆனால், இது சாதாரண மயக்கம்தான், இதயத் துடிப்பு சீராக இல்லாததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மற்றபடி அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்யவில்லை. சாதாரண செக் அப் மட்டுமே நடந்தது. அவரது உடல்நிலையில் எந்தப் பிரச்னையும் இல்லை” என்று தீபிகா தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here