Home சினிமா செய்திகள் பவுண்டட் ஸ்க்ரிப்டும் சினாப்சிஸும் – இயக்குநர்களிடம் தயாரிப்பாளர்கள் கதை கேட்பதில்லையா? உண்மை என்ன? | Directors approaching with a story – What the producers expect from them?

பவுண்டட் ஸ்க்ரிப்டும் சினாப்சிஸும் – இயக்குநர்களிடம் தயாரிப்பாளர்கள் கதை கேட்பதில்லையா? உண்மை என்ன? | Directors approaching with a story – What the producers expect from them?

0
பவுண்டட் ஸ்க்ரிப்டும் சினாப்சிஸும் – இயக்குநர்களிடம் தயாரிப்பாளர்கள் கதை கேட்பதில்லையா? உண்மை என்ன? | Directors approaching with a story – What the producers expect from them?

[ad_1]

நம்ம கதையை எழுத்தா கொடுத்தால், அதை மாத்தி வேற ஒண்ணா பண்ணிடுவாங்கன்னு பயப்படுறவங்கதான், ஸ்கிரிப்ட் கொடுக்கத் தயங்குவாங்க. இன்றைய காப்பிரைட் சட்டப்படி அப்படியெல்லாம் நாம சீன்களை எடுத்துட முடியாது. ஸ்கிரிப்ட் கொடுக்கத் தயங்குறவங்க, நெரேஷனை சொல்றேன்னு வந்து நிற்பாங்க.

எழுதுறதுங்கறது ஒரு பெரிய வேலை. அதுக்கு நேரமும் பொறுமையும் ரொம்ப முக்கியம். இதையும் தாண்டி சில எழுத்துக்கு உதவியாளர்களும், சிற்சில செலவுகளுமேகூட தேவையா அமையும். இந்த மாதிரியான சிக்கல்களால் சிலர் கதைகளை எழுதுறதில்ல. இதுல பாதிப்பேருக்கு ஈகோ இருக்கு. ‘கதையைப் படிச்சா மட்டும் நாம நினைக்கற ஃபீலிங்ஸைப் புரிஞ்சுப்பாங்களா’ன்னு ஈகோவா இருப்பாங்க.

கைதி படத்தில்...

கைதி படத்தில்…

ஒரு தயாரிப்பாளரா, நான் சொல்ல விரும்புறது ஒரு கதையைப் படிக்கும்போது அந்த புராஜெக்ட்ல இருக்கற குழப்பங்கள்ல பாதி தீர்ந்திடும். நெரேஷனா சொல்றப்ப, ‘அந்த இடத்துல கோபமா நடந்து வர்றான்’ன்னு ஒரு வார்த்தையில சொல்லிட்டுப் போயிடலாம். ஆனா, கதையைக் கேட்குறவருக்கு அது அவருடைய கற்பனையில வேற ஒண்ணா எண்ணியிருக்க வாய்ப்பிருக்கும். ஸோ, அந்த சீன் படமாகும் போது, இயக்குநர் சொன்னது ஒண்ணா இருக்கும். அந்தத் தயாரிப்பாளர் நினைச்சது வேறா இருக்கும். அதுவே, அவர் எழுத்தா கொடுத்திருந்தால், இதுதான் வரும்னு நமக்கும் தெரிஞ்சிடும். அதுல எதுவும் மாற்றங்கள் இருந்தால், ஒரு தயாரிப்பாளரா கேள்வி கேட்க முடியும்.

ஒரு முழு ஸ்கிரிப்ட்டா படிக்கும்போது கிட்டத்தட்ட 60 சதவிகித படம் முடிஞ்ச மாதிரி… நடிகர்கள், லொக்கேஷன் போன்ற விஷயங்கள்தான் மீதி சதவிகிதமா இருக்கும். இதற்காகத்தான் ஸ்கிரிப்ட்டைக் கேட்குறோம்! இன்னிக்கு காப்பிரைட் சட்டம் வலுவா இருக்கு. உங்க ஸ்கிரிப்ட்டுக்குப் பாதுகாப்பு இருக்கு. அதனால தைரியமா களத்தில் இறங்கிச் சாதிக்கலாம்” என்கிறார் எஸ்.ஆர்.பிரபு.

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here