Home சினிமா செய்திகள் பாக்கியலட்சுமி: ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது …! ராதிகாவின் என்ட்ரியால் வசமாக சிக்கி கொண்ட கோபி…! – can’t run and can’t shine! gopi gets comfortable with radhika’s entry!

பாக்கியலட்சுமி: ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது …! ராதிகாவின் என்ட்ரியால் வசமாக சிக்கி கொண்ட கோபி…! – can’t run and can’t shine! gopi gets comfortable with radhika’s entry!

0
பாக்கியலட்சுமி: ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது …! ராதிகாவின் என்ட்ரியால் வசமாக சிக்கி கொண்ட கோபி…! – can’t run and can’t shine! gopi gets comfortable with radhika’s entry!

[ad_1]

பாக்யலட்சுமி சீரியலில் கோபி வசமாக மாட்டப்போகும் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.சின்னதிரையில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்தவையாக இருந்து வருகின்றன. சீரியல்களின் கதைகளமும், அதில் திறம்பட நடிக்கும் நடிகர்களாலும் பல சீரியல்கள் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்து உள்ளன.

அந்த வகையில் ஸ்டார் விஜய் டிவியில் பல ஹிட் சீரியல்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன. பிற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியல்கள் விஜய் டிவி-யில் அதிகம் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக விஜய் டிவி-யில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது.

மீண்டும் சர்ச்சையில் சிக்குவாரா கமல் ? பரபரப்பை கிளப்பிய சம்பவம்..!

பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதை என்ற ஒன்லைனில் ஒளிபரப்பாக தொடங்கியது. ஆரம்பத்தில் டி.ஆர்.பி ரேசில் மெதுவாக சென்று கொண்டிருந்த சீரியலின் வேகத்தை கோபி – ராதிகா ட்ராக் மின்னல் வேகத்தில் கொண்டு சென்றது.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

பாக்கியாவை பிடிக்கவில்லை என்றாலும் குடும்பத்திற்காக, பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழ்கிறார்.
அதே போல் முன்னாள் காதலி ராதிகாவையும் அவரால் மறக்க முடியவில்லை. கதை இப்படியே பயணித்துக் கொண்டிருக்க கோபி யாரிடமும் மாட்டுவதாக தெரியவில்லை.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தற்போதைய கதைப்படி, ‘பாக்யலட்சுமி’ மற்றும் பாண்டியன் ஸ்டோர் மெகா சங்கமம் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் பாக்யாவின் வீட்டிற்கு வந்துள்ளனர்.தற்போது கோபியை பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்கள் பாடாய்படுத்துகின்றனர்.இந்நிலையில் கோபி வசமாக மாட்டப்போகும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ராதிகாவின் வீட்டிற்கு செல்லும் பாக்யா, தனது மாமாவின் 75வது பிறந்தநாளுக்கு அழைப்பு விடுக்கிறார். அப்போது ராதிகாவின் வருங்கால கணவரையும் அழைத்து வரும்படி கூறுகிறார். இதனால் இந்த முறை கோபி மாட்டுவது உறுதியாகிவிட்டது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here