Home சினிமா செய்திகள் “பாலிவுட் திறமைகளைப் புதைக்கும் கல்லறையாக இருக்கிறது!”- `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ விவேக் அக்னிஹோத்ரி | Vivek Agnihotri shares his opinion about the current Bollywood industry

“பாலிவுட் திறமைகளைப் புதைக்கும் கல்லறையாக இருக்கிறது!”- `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ விவேக் அக்னிஹோத்ரி | Vivek Agnihotri shares his opinion about the current Bollywood industry

0
“பாலிவுட் திறமைகளைப் புதைக்கும் கல்லறையாக இருக்கிறது!”- `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ விவேக் அக்னிஹோத்ரி | Vivek Agnihotri shares his opinion about the current Bollywood industry

[ad_1]

‘தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்’, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ போன்ற படங்கள் நாடுமுழுவதும் கலவையான விமர்சனங்களைப் பெற்று பேசுபொருளாகி இருந்தன. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் விவேக் அக்னிஹோத்ரி. இவர் சமீபத்தில் “பாலிவுட் திறமைகளைப் புதைக்கும் கல்லறையாக இருக்கிறது” என்று கூறியுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இது பற்றிக் கூறிய அவர், “நீங்கள் பார்ப்பது உண்மையான பாலிவுட் அல்ல. உண்மையான பாலிவுட்டின் பக்கங்கள் இருளால் நிறைந்தது. இதைச் சாமானிய மக்களால் புரிந்துகொள்ள முடியாது. அந்த இருண்ட பக்கங்களில் பலரின் புதைந்த கனவுகளும், உடைந்த கனவுகளும், நசுக்கப்பட்ட கனவுகளும் நிறைந்திருக்கின்றன. பாலிவுட் திறமைகளின் அருங்காட்சியகம் மட்டுமல்ல அது திறமைகளைப் புதைக்கும் கல்லறையும்கூட. நான் சொல்வது வெறும் நிராகரிப்பைப் பற்றி மட்டுமல்ல. நிராகரிப்பு என்பது இதன் ஒரு பகுதி மட்டுமே என்பது எல்லோருக்கும் தெரியும். இது அவமானம், சுரண்டல், மென்மையான கனவுகள் மற்றும் ஒட்டுமொத்த மனிதக்குலத்தின் மீதான நம்பிக்கையைச் சிதைப்பது ஆகியவற்றைப் பற்றியது!”

விவேக் அக்னிஹோத்ரி

விவேக் அக்னிஹோத்ரி

“ஒருவர் உணவின்றி வாழலாம். ஆனால் மரியாதை, சுயமதிப்பு மற்றும் நம்பிக்கை இல்லாமல் வாழ முடியாது. எந்த ஒரு நடுத்தரவர்க்க இளைஞனும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர வேண்டும் என்று கனவில் கூட விரும்புவதில்லை. இந்த பாலிவுட் சினிமாவில் தோல்வியுற்றவர்கள் மீண்டும் போராட முடியாமல் விட்டுக்கொடுக்கும் அளவுக்குக் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். அதில் பலர், இதெல்லாம் வேண்டாம் என்று வீடு திரும்பி விடுகிறார்கள். உண்மையில் அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் கூறுவேண்டும்.

இதைச் சமாளித்துத் தாக்குப் பிடித்து இருப்பவர்களில் சிலர் வெற்றி காண்கிறார்கள். இருந்தாலும், அது நிலையான வெற்றி அல்ல. அவர்கள் உண்மையான வெற்றியைப் பெறத் தொடர்ந்து போராட வேண்டியிருக்கும். அப்படி வெற்றி பெறாதவர்கள் போதைப்பொருள், மது மற்றும் அனைத்து வகையான உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அந்தச் சமயங்களில் பணம் மட்டுமே அவர்களுக்குப் பிரதானமாக மாறிவிடுகிறது. அதற்காக அவர்கள் எதையும் செய்யும் அளவிற்குப் போய்விடுகிறார்கள். அதேசமயம் சில வெற்றிகளும் ஆபத்தானவை. இங்கு நீங்கள் அவமானம் மற்றும் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவீர்கள். இவை தவிர்த்து, ஒரு கட்டத்தில் உங்களிடம் எந்த வருமானமும் அதிகாரமும் இல்லை என்றாலும் நீங்கள் ஒரு நட்சத்திரத்தைப்போல் நடந்துகொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here