Home சினிமா செய்திகள் பால் வாக்கர் ஓட்டிய டொயோட்டா சுப்ரா கார் ஏலம்: `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ காரின் ஸ்பெஷல் என்ன? | Paul Walker’s Toyota Supra is up for auction

பால் வாக்கர் ஓட்டிய டொயோட்டா சுப்ரா கார் ஏலம்: `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ காரின் ஸ்பெஷல் என்ன? | Paul Walker’s Toyota Supra is up for auction

0

[ad_1]

இந்த சுப்ராவின் இன்ஸ்பிரேஷன் லம்போகினி டயாப்லோ எனும் கார்தான். அதாவது, லம்போகினி டயாப்லோ காரின் ஆரஞ்ச் நிறம்தான் இதன் முதல் இன்ஸ்பிரேஷனாம். காரின் பக்கவாட்டில் வரும் ‛நியூக்ளியர் கிளாடியேட்டர்’ பெயின்ட்டிங் வேலைப்பாடுகள், காரைச் சுற்றி எல்லா பக்கங்களிலும் பொருத்தப்பட்டுள்ள ஸ்டைலான Bomex கிட், அலுமினியம் Bi-Plane பின் பக்க ஸ்பாய்லர் (வேகங்களில் காரின் நிலைத்தன்மையைக் குலைக்காமல் இருக்கும்), 19 இன்ச் 5 ஸ்போக் ரேஸிங் ட்யூனர் அலாய் வீல்கள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இந்த காரை ஒரு எக்ஸாட்டிக் காராகக் காட்டுகின்றன.

பொதுவாக, அமெரிக்க கார்களைக் கவனித்தீர்கள் என்றால் கார்களின் முன் பக்க பானட் பயங்கர நீளமாக இருக்கும். அதாவது, விண்ட்ஷீல்டுக்கும் காரின் முன் பக்க பம்பருக்கும் ஒருவர் படுத்து உருளலாம் எனும் அளவுக்குத் தூரம் இருக்கும். இது காற்றைக் கிழித்துக் கொண்டு பயணிக்கவும், செமயான ஏரோடைனமிக்ஸும் கிடைக்கும் என்பதைத் தாண்டி ஒரு முக்கியமான விஷயம் உண்டு. கார் எதிலாவது மோதும்போது ஏற்படும் பாதிப்பிலிருந்து பெரும்பாலும் பயணிகளுக்குப் பெரிய அடிவிழாமல் காக்கும். அதுபோன்ற TRD எனும் ஸ்டைலான பானட், இன்னும் இந்த காரை செமையாகக் காட்டுகிறது.

இந்த 1994 மாடல் சுப்ராவின் பானெட்டுக்குக் கீழே உள்ளது 3,000 சிசி கொண்ட டர்போசார்ஜ்டு இன்லைன் 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின். இதில் கியர்கள் குறைவுதான். 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன். லம்போகினி, ஃபெராரி போன்ற சூப்பர் கார்களுக்கு டஃப் ஃபைட் கொடுக்காவிட்டாலும், சூப்பர் கார்களுக்கு இணையான வேகம் இதில் இருக்கும். இதன் டாப் ஸ்பீடு 250 கிமீ. சுமார் 5.4 விநாடிகளில் இது 100 கிமீ வேகத்தைக் கடக்கும்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here