Home தமிழ் News ஆட்டோமொபைல் பெட்ரோல் & டீசல் மட்டுமல்ல, சிஎன்ஜி-யின் விலையும் உயருது!! மும்பையில் 10 மாதங்களில் 14வது முறையாக அதிகரிப்பு!

பெட்ரோல் & டீசல் மட்டுமல்ல, சிஎன்ஜி-யின் விலையும் உயருது!! மும்பையில் 10 மாதங்களில் 14வது முறையாக அதிகரிப்பு!

0
பெட்ரோல் & டீசல் மட்டுமல்ல, சிஎன்ஜி-யின் விலையும் உயருது!! மும்பையில் 10 மாதங்களில் 14வது முறையாக அதிகரிப்பு!

[ad_1]

பெட்ரோல் & டீசல் மட்டுமல்ல, சிஎன்ஜி-யின் விலையும் உயருது!! மும்பையில் 10 மாதங்களில் 14வது முறையாக அதிகரிப்பு!

அழுத்தம் கொடுக்கப்பட்ட இயற்கை எரிவாயு என்பதன் சுருக்கமான சிஎன்ஜி எரிபொருளினால் இயங்கக்கூடிய கார்களும் சில பிராண்டில் இருந்து விற்பனையில் உள்ளன. குறிப்பாக, இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுஸுகி சிஎன்ஜி வாகனங்களை தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

பெட்ரோல் & டீசல் மட்டுமல்ல, சிஎன்ஜி-யின் விலையும் உயருது!! மும்பையில் 10 மாதங்களில் 14வது முறையாக அதிகரிப்பு!

பெட்ரோல் & டீசல் விலைகளை போல் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவின் விலையும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்படுகிறது. அதுமட்டுமின்றி, பெட்ரோல் & டீசலின் விலைகள் உயர்த்தப்படுவதை போல் சிஎன்ஜி எரிபொருளின் விலையும் சமீப மாதங்களாக அவ்வப்போது அதிகரிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் & டீசல் மட்டுமல்ல, சிஎன்ஜி-யின் விலையும் உயருது!! மும்பையில் 10 மாதங்களில் 14வது முறையாக அதிகரிப்பு!

இந்த வகையில் சமீபத்தில் கிலோவிற்கு ரூ.3.96 உயர்த்தப்பட்டதால், இந்தியாவிலேயே அதிகப்பட்சமாக மும்பையில் 1 கிலோ சிஎன்ஜி எரிபொருளின் விலை ரூ.61.5 ஆக உள்ளது. கடந்த நவ.27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த விலை அதிகரிப்பானது மும்பையில் கடந்த 2 மாதங்களில் கொண்டுவரப்பட்ட மூன்றாவது விலை அதிகரிப்பாகும்.

பெட்ரோல் & டீசல் மட்டுமல்ல, சிஎன்ஜி-யின் விலையும் உயருது!! மும்பையில் 10 மாதங்களில் 14வது முறையாக அதிகரிப்பு!

மும்பையில் எம்.ஜி.எல் எனப்படும் மஹாநகர் கேஸ் நிறுவனம் கடந்த 10 மாதங்களில் சுமார் 14 தடவை சிஎன்ஜி-யின் விலையினை உயர்த்தியுள்ளது. இருப்பினும் பெட்ரோல் & டீசல் விலைகளுடன் ஒப்பிடுகையில் பெரும்பான்மையான மாநிலங்களில் சிஎன்ஜி எரிபொருளின் விலை ஏறக்குறைய ரூ.45 அளவில் குறைவாக உள்ளது.

பெட்ரோல் & டீசல் மட்டுமல்ல, சிஎன்ஜி-யின் விலையும் உயருது!! மும்பையில் 10 மாதங்களில் 14வது முறையாக அதிகரிப்பு!

உதாரணத்திற்கு, மும்பையில் தற்சமயம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.110 ஆகவும், டீசலின் விலை ரூ.94.14 ஆகவும் உள்ளது. ஆனால் சிஎன்ஜி ஒரு கிலோ ரூ.61.5 மட்டுமே. இதுவே சிஎன்ஜி எரிபொருளின் பயன்பாடு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருவதற்கு காரணமாகும்.

பெட்ரோல் & டீசல் மட்டுமல்ல, சிஎன்ஜி-யின் விலையும் உயருது!! மும்பையில் 10 மாதங்களில் 14வது முறையாக அதிகரிப்பு!

இயக்க ஆற்றலுக்கான கொள்முதல் செலவு குறைவதால் பெரும்பாலான ஆட்டோ ரிக்‌ஷாக்கள், டாக்ஸி, பெரிய & சிறிய அளவிலான கமர்சியல் வாகனங்களின் உரிமையாளர்கள் விரும்பக்கூடிய மாற்று எரிபொருளாக சிஎன்ஜி மாறி வருகிறது. இவ்வளவு ஏன், ஏற்கனவே கூறியதுபோல், பயணிகள் கார்கள் வாங்குவோரும் சிஎன்ஜி-ஐ பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

பெட்ரோல் & டீசல் மட்டுமல்ல, சிஎன்ஜி-யின் விலையும் உயருது!! மும்பையில் 10 மாதங்களில் 14வது முறையாக அதிகரிப்பு!

ஆனால் தற்போது மும்பையை போல் பல இந்திய நகரங்களில் சிஎன்ஜி-யின் மதிப்பு அதிகரிக்கப்பட்டு வருவதால், இது நேரடியாக இத்தகைய வாகன உரிமையாளர்களை பாதிக்கும். அதுமட்டுமில்லாமல், எதிர்காலத்தில் சிஎன்ஜி எரிபொருளை ஏற்கக்கூடிய வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவதற்கும் காரணமாக அமையலாம்.

பெட்ரோல் & டீசல் மட்டுமல்ல, சிஎன்ஜி-யின் விலையும் உயருது!! மும்பையில் 10 மாதங்களில் 14வது முறையாக அதிகரிப்பு!

இந்தியாவில் தற்சமயம் பொதுமக்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளுள் பெட்ரோல் & டீசல் விலை உயர்வும் ஒன்றாகும். வாகன ஓட்டிகள் பலரது தலையில் இடி விழுவதுபோல் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வந்த பெட்ரோல் & டீசலின் விலைகள் கடந்த 25 நாட்களாக பெரியதாக எந்த மாற்றமுமின்றி தொடர்கின்றன. இது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் & டீசல் மட்டுமல்ல, சிஎன்ஜி-யின் விலையும் உயருது!! மும்பையில் 10 மாதங்களில் 14வது முறையாக அதிகரிப்பு!

அதுமட்டுமில்லாமல், இந்த நவம்பர் மாத துவக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசாங்கம் அதிரடியாக 1 லிட்டர் பெட்ரோலின் விலையில் ரூ.5-ஐயும், 1 லி டீசலின் விலையில் ரூ.10-ஐயும் குறைத்திருந்தது. பெட்ரோல் & டீசலுக்கு மத்திய அரசாங்கம் நிர்ணயிக்கும் வரிகளில் இந்த குறைப்பு நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டு இருந்தன. பெட்ரோல் (அ) டீசலின் விலையினை ரூ.1 குறைத்தாலே கிட்டத்தட்ட ரூ.14,000 கோடி வரையில் மத்திய அரசாங்கத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் & டீசல் மட்டுமல்ல, சிஎன்ஜி-யின் விலையும் உயருது!! மும்பையில் 10 மாதங்களில் 14வது முறையாக அதிகரிப்பு!

இந்த வகையில் பார்த்தோமேயானால், இந்த அதிகப்படியான விலை குறைப்பு சுமார் ரூ.2.10 லட்ச கோடி வரையில் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விலை குறைப்பினால் ரூ.120-ஐ நெருங்கி கொண்டிருந்த 1 லி பெட்ரோலின் விலை தற்போது ரூ.110க்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் இந்த நிலை தற்காலிகமானவை என்றே கூறப்படுகிறது.

பெட்ரோல் & டீசல் மட்டுமல்ல, சிஎன்ஜி-யின் விலையும் உயருது!! மும்பையில் 10 மாதங்களில் 14வது முறையாக அதிகரிப்பு!

அதாவது, எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பெட்ரோல் & டீசலின் விலை அதிகரிக்கப்படலாமாம். கடந்த ஞாயிற்று கிழமை நிலவரப்படி, நமது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.40 ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.42 ஆகவும் உள்ளன. தேசிய தலைநகர் டெல்லியில் ரூ.103.97 மற்றும் ரூ.86.67 என்ற விலைகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் & டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here