Home சினிமா செய்திகள் பெண்கள் கிட்ட எனக்கு நல்ல பேரு இல்லை… ராதாரவி கலகல பேச்சு ! | Radha Ravi Ultimate Comedy Speech on Directors Union Function

பெண்கள் கிட்ட எனக்கு நல்ல பேரு இல்லை… ராதாரவி கலகல பேச்சு ! | Radha Ravi Ultimate Comedy Speech on Directors Union Function

0
பெண்கள் கிட்ட எனக்கு நல்ல பேரு இல்லை… ராதாரவி கலகல பேச்சு ! | Radha Ravi Ultimate Comedy Speech on Directors Union Function

[ad_1]

ராதா ரவி

ராதா ரவி

தேர்தலில் வெற்றி பெற்ற ஆர்.கே செல்வமணிக்கு டப்பிங் யூனியன் தலைவருமான ராதாரவி வாழ்த்து கூறினார். தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் இந்த நேரத்தில் ஒரு கோரிக்கை முன் வைக்கிறேன். உதவி இயக்குநர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுங்கள். அவர்கள் தான் உங்களை வெற்றிபெற வைத்தது என்றார்.

ஆர்.கே.செல்வமணி திருடன் தான்

ஆர்.கே.செல்வமணி திருடன் தான்

தொடர்ந்து பேசி ராதா ரவி, என்னை பற்றி கண்டதையும் எழுதுறீங்க, ராதா ரவி எதையாவது பேசுவார் தலைப்பா போடலாம் என்று பல யூடியூப் சேனல் காரர்கள் தயாராக இருக்கிறார். ஆர்.கே.செல்வமணி திருடிவிட்டார் என்று எழுதி இருந்தீர்கள் அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆர்.கே.செல்வமணி திருடன் தான்… பல மனங்களை திருடிய திருடன் என்று கலகலப்பாக பேசினார்.

எஸ்.ஏ.சி எனக்கு சோறுபோட்டவர்

எஸ்.ஏ.சி எனக்கு சோறுபோட்டவர்

எஸ்.ஏ.சந்திரசேகர் படத்தில் நடிப்பது ரொம்ப கஷ்டம், சம்பளத்தை குறைவாத்தான் தருவார். சம்பளம் அதிகமாக வேண்டும் என்று கேட்டால், அதெல்லாம் கட்டுபடி ஆகாது என்று கறாராக பேசுவார். இவ்வளவு எல்லாம் பேசிட்டு வெள்ளைக்காரன் மாதிரி பணத்தை கொடுப்பார் என்றார். எஸ்.ஏ.சி தலைவராக நின்ற போது அவருக்கு சப்போர்ட் பண்ணவன், அவரை என்னால் எதிர்த்து நிற்க முடியாது எனக்கு சோறுப்போட்டு வளர்த்தவர் அவர் என்று பேசினார்.

நான் பயங்கரமானவன் இல்லம்மா

நான் பயங்கரமானவன் இல்லம்மா

அனைவருக்கு நன்றி கூறி பேச்சை முடிக்கும் முன்பு, என்னை பேச அழைத்த பெண், ராதா ரவியை பார்த்தாலே பயமா இருக்கும், நடுக்கும் என்றார். அந்த பெண் சொன்னது போல நான் பயங்கரமானவன் இல்லம்மா, ஏன் சொல்றேன்னா எனக்கு எப்பவும் பெண்களிடம் நல்ல பெயர் இல்லை, அதேபோல திரைப்படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரமும் அப்படி இருப்பதால் ராதா மோசமானவன் என்ற பெயர் வந்துவிட்டது என்று கலகலப்பாக பேசினார்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here