Home Sports விளையாட்டு செய்திகள் பெரும்பாலான வீரர்களை அடுத்த சீசனுக்கு தக்கவைக்க விரும்பம்: டெல்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் பாண்டிங் ஆசை | We were outplayed, but would love to have most players back next season: Ponting

பெரும்பாலான வீரர்களை அடுத்த சீசனுக்கு தக்கவைக்க விரும்பம்: டெல்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் பாண்டிங் ஆசை | We were outplayed, but would love to have most players back next season: Ponting

0
பெரும்பாலான வீரர்களை அடுத்த சீசனுக்கு தக்கவைக்க விரும்பம்: டெல்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் பாண்டிங் ஆசை | We were outplayed, but would love to have most players back next season: Ponting

[ad_1]


2022ம் ஆண்டு ஐபிஎல் சீசனிலும் டெல்லியில் கேபிடல்ஸ் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களையும் தக்கவைக்க விருப்பமாக இருக்கிறது என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபயர்-2 ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்குள் சென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. 136 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்து 3 விக்ெகட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணி சேஸிங்கின்போது, ஆட்டத்தின் 15 ஓவர்கள்வரை வெற்றி கொல்கத்தாவின் பக்கம்தான் இருந்தது. ஆனால், அடுத்த 4 ஓவர்கள் ஆட்டம் திசைமாறி டெல்லி கேபிடல்ஸ் பக்ககம் பயணிக்கத் தொடங்கியது.

ஆட்டம் போன போக்கைப் பார்த்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரசிகர்கள், நிர்வாகிகள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். கடைசி 4 ஓவர்களையும் டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக வீசி ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு சென்றனர்.123 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வலுவான நிலையில் இருந்த கொல்கத்தா அணி, அடுத்த 7 ரன்களைச் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடிக்குள் சிக்கியது.

ஆனால், கடைசி இரு பந்துகளில் 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் அஸ்வின் பந்தில் திரிபாதி அடித்த சிக்ஸர் வெற்றிக்கு கொண்டு சென்றது.

தோல்விக்குப்பின் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:

2-வது தகுதிச்சுற்றிலும் நாங்கள் கொல்கத்தா அணியால் தோற்கடிக்கப்பட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரையும் அடுத்த சீசனுக்கும் தக்கவைக்கவே விரும்புகிறோம்.

நேர்மையாகக் கூறினால், எங்களுக்கு கிடைத்த ஒவ்வொருவீரரும் தனித்தன்மையான திறமையுடையவர்கள், டெல்லி அணிக்கு இதுவரை கிடைத்திராத வீரர்கள். கடந்த இரு சீசன்களிலும் வீரர்களும், அணியின் சப்்போர்ட் ஊழியர்களும் அருமையான பங்களிப்புச் செய்தனர். எங்களின் செயல்பாடுதான் எங்கள் விளையாட்டில் பேசியது அதை வைத்தே தெரி்ந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டும் எங்களால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாதது வருத்தமாக இருக்கிறது. அடுத்த சீசனுக்கான ஏலத்தில் 3 முதல் 4 வீரர்களைத் தக்கவைக்க முடியும். ஆனால், ஏலத்தில் அனைத்து வீரர்களையும் தக்கவைக்க விரும்புகிறோம். கடந்த 3 சீசன்களாக ஒரு குடும்பமாக இருந்து சிறப்பாகச் செயல்பட்டோம், மறக்கமுடியாத வெற்றிகளையும், நினைவுகளும் கிடைத்தன.

இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்ததற்கு கூடுதலான ரன்கள் அடிக்காமல் இருந்ததே காரணம். இந்த ஐபிஎல் சீசன் முழுமையாகப் பார்த்தால், இந்த ஒரு போட்டியில் மட்டும்தான் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம், ரன்களும் சேர்க்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தோம்.

ஸ்ரேயாஸ் அய்யரும், ஹெட்மயரும் கடைசி நேரத்தில் நிலைக்காவிட்டால், நாங்கள் 130 ரன்களைக் கூட எட்டியிருக்க முடியாது. இதுபற்றி நிச்சயம் ஓய்வறையில் பேசுவோம். நாங்கள் ஐபிஎல் சீசனை முடித்தவிதம் எங்களுக்கு வேதனை தருவதாகவே இருக்கிறது.

இரு அணிகளுக்கும் பவர்-ப்ளே வித்தியாசமாகவே இருந்தது. நாங்கள் பவர்ப்ளேயில் 37 ரன்கள்தான் எடுத்தோம், நாங்கள் நினைத்ததைவிட 10 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.

இவ்வாறு பாண்டிங் தெரிவித்தார்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here