Home சினிமா செய்திகள் மகான் படத்தில் வாணி போஜனா… எங்கப்பா இருக்கார்…. ஆளவே காணோம் | Where is Vani Bhojan in Mahaan movie

மகான் படத்தில் வாணி போஜனா… எங்கப்பா இருக்கார்…. ஆளவே காணோம் | Where is Vani Bhojan in Mahaan movie

0
மகான் படத்தில் வாணி போஜனா… எங்கப்பா இருக்கார்…. ஆளவே காணோம் | Where is Vani Bhojan in Mahaan movie

[ad_1]

ரிலீசான மகான் படம்

ரிலீசான மகான் படம்

சியான் விக்ரமின் 60 வது படமாக உருவாகி உள்ள மகான் படம் அமேசான் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 10 ம் தேதி வெளியானது. கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு வெளிவரும் விக்ரம், முதல் முறையாக அப்பா-மகன் இணைந்து நடித்துள்ள படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்த படத்தில் நாயகிகளாக சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நடித்திருப்பதாக கூறினார்கள்.

 விக்ரமிற்கு இரண்டு ஜோடிகளா

விக்ரமிற்கு இரண்டு ஜோடிகளா

இதனால் விக்ரமிற்கு ஜோடி சிம்ரன், துருவ் விக்ரமிற்கு ஜோடியாக தான் வாணி போஜன் நடிக்கிறார் போல என அனைவரும் முதலில் நினைத்தனர். ஆனால் இருவருமே அப்பா விக்ரமிற்கு தான் ஜோடி. மகன் துருவிற்கு ஜோடி கிடையாது என சொல்லி ஷாக் கொடுத்தனர். இதனால் படத்தின் கதை என்னவாக இருக்கும் என அனைவரும் யோசித்து வந்தனர்.

சிம்ரனை தவிர யாரையும் காணோம்

சிம்ரனை தவிர யாரையும் காணோம்

இந்நிலையில் மகான் படம் நேற்று ரிலீசானது. இதில் முதல் பாதியில் விக்ரம் நடிப்பில் அசத்தி இருக்கிறார் என்றால், இரண்டாவது பாதியில் அப்பா – மகன் இருவரும் சேர்ந்து மிரட்டி உள்ளனர். நடிப்பு, ஆக்ஷன் போன்றவற்றில் ஒருவருக்கு ஒருவர் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்றே காட்டி உள்ளனர். இந்த படத்தில் பெண் கேரக்டர்கள் என்று பார்த்தால் அத சிம்ரனும், பாபி சிம்ஹாவின் மனைவியாக வரும் பெண் மட்டும் தான். மற்றபடி எந்த பெண் கேரக்டரும் இல்லை.

வாணி போஜன் வரவே இல்லையே

வாணி போஜன் வரவே இல்லையே

வாணி போஜன் வருவார் என்று பார்த்தால், படத்தில் கடைசி வரை வரவேயில்லை. இதனால் ரசிகர்கள், வாணி போஜன் நடித்திருப்பதாக தானே சொன்னார்கள் எங்கே அவரை ஒரு சீனில் கூட காணவில்லை என கேட்க துவங்கி விட்டனர். படம் போன விறுவிறுப்பில் வாணி போஜனை மற்றவர்கள் மறந்திருந்தாலும் அவரின் ரசிகர்கள் மறக்காமல் கவனித்து கேட்டுள்ளனர்.

ஓ...இது தான் காரணமா

ஓ…இது தான் காரணமா

இதற்கு என்ன காரணம் என விசாரித்த போது, படத்தில் விக்ரமின் இரண்டாவது ஜோடியாக தான் வாணி போஜன் நடித்திருந்தாராம். ஆனால் மகான் படம் மொத்தம் இரண்டு மணி நேரம் 42 நிமிடங்கள் ஓடுகிறது. இதில் வாணி போஜன் இருக்கும் காட்சிகள் வரும் போது மிகவும் நீளமாக இருந்ததாம். இதனால் மற்ற காட்சிகளை நீக்க முடியாது என்பதால், படத்தின் நீளம் கருதி வாணி போஜன் நடித்த காட்சிகளை மொத்தமாகவே நீக்கி விட்டார்களாம். விரைவில் இதை அன்சீன் காட்சிகள் வெளியிடும் போது வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here