Home தமிழ் News சமையல் மட்டன் தால்சா | Mutton Talsa

மட்டன் தால்சா | Mutton Talsa

0
மட்டன் தால்சா | Mutton Talsa

[ad_1]

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
சின்ன வெங்காயம் – 12
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 2
மட்டன் – 1/2 கிலோ
துவரம் பருப்பு – 1/2 கப்
கடலை பருப்பு – 1/4 கப்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கத்திரிக்காய் – 1
மாங்காய் – 1/2
புளிச்சாறு – 1/4 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி – சிறிது

தாளிப்பதற்கு..

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வெங்காயம் – 1/2 கப்

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். * பின் அதில் சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் மட்டனை கழுவிப் போட்டு நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும். அதன் பின் கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் போதுமான நீரை, அதாவது வழக்கமாக பருப்பு வேக வைக்க ஊற்றும் அளவை விட அதிகமாக நீரை ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.  

விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். மட்டனும், பருப்புக்களும் நன்கு வெந்ததும், காய்கறிகளான கத்திரிக்காய், மாங்காய் சேர்த்து புளிச்சாற்றினையும் சிறிது ஊற்றி மூடி வைத்து, 10 நிமிடம் காய்கறிகள் வேகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், மிளகு மற்றும் சிறிது வெங்காயத்தை சேர்த்து வதக்கி, குக்கரில் உள்ள மட்டன் தால்சாவில் ஊற்றி கிளறி, மேலே சிறிது கொத்தமல்லியை தூவினால், மட்டன் தால்சா தயார்.

[ad_2]

Source link

www.dinakaran.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here