Home தமிழ் News ஆட்டோமொபைல் மஹிந்திரா குறித்து வைத்திருக்கும் அதே நாளில் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் ஓலா… மீண்டும் மலிவு விலை வாகனம் களமிறங்க போகுதா!

மஹிந்திரா குறித்து வைத்திருக்கும் அதே நாளில் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் ஓலா… மீண்டும் மலிவு விலை வாகனம் களமிறங்க போகுதா!

0
மஹிந்திரா குறித்து வைத்திருக்கும் அதே நாளில் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் ஓலா… மீண்டும் மலிவு விலை வாகனம் களமிறங்க போகுதா!

மஹிந்திரா குறித்து வைத்திருக்கும் அதே நாளில் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் ஓலா... மீண்டும் மலிவு விலை வாகனம் களமிறங்க போகுதா!

இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஓலா எலெக்ட்ரிக் ()-ம் ஒன்று. இந்த நிறுவனத்தின் சிஇஓ-வாக பணியாற்றி வருபவர் பவிஷ் அகர்வால். இவரே யாரும் எதிர்பார்த்திராத ஓர் தகவலை தற்பது வெளியிட்டிருக்கின்றார். அவர், ஓலா நிறுவனத்தின்கீழ் புதிய தயாரிப்பு ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றார்.

மஹிந்திரா குறித்து வைத்திருக்கும் அதே நாளில் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் ஓலா... மீண்டும் மலிவு விலை வாகனம் களமிறங்க போகுதா!

இவரின் இந்த அறிவிப்பு ஓலா எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரியர்கள் மற்றும் மின்சார இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. நிறுவனம், அதன் புதிய தயாரிப்புகுறித்த எந்தவொரு முக்கிய தகவலையும் வெளியிடவில்லை. ஆகையால், அது என்ன மாதிரியான வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பதுகூட தெரியாத நிலை தற்போது தென்படுகின்றது.

மஹிந்திரா குறித்து வைத்திருக்கும் அதே நாளில் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் ஓலா... மீண்டும் மலிவு விலை வாகனம் களமிறங்க போகுதா!

இதுகுறித்த முழு விபரமும் வரும் 15ம் தேதி அன்றே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இருசக்கர வாகன பிரியர்கள் அனைவரின் கவனமும் ஆகஸ்டு 15ம் தேதியின் பக்கம் திரும்பியிருக்கின்றது. இந்த தினத்தில் மஹிந்திரா நிறுவனமும் அதன் புதுமுக எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

மஹிந்திரா குறித்து வைத்திருக்கும் அதே நாளில் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் ஓலா... மீண்டும் மலிவு விலை வாகனம் களமிறங்க போகுதா!

எனவே, வரும் ஆகஸ்டு 15ம் தேதி இந்திய மின் வாகன பிரியர்களுக்கு மிகப் பெரிய விருந்தளிக்கும் நாளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே கூறியதைப் போல் ஓலா நிறுவனம் அந்த தினத்தில் என்ன மாதிரியான புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யப்போகின்றது என்கிற தகவல் வெளியாகவில்லை.

மஹிந்திரா குறித்து வைத்திருக்கும் அதே நாளில் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் ஓலா... மீண்டும் மலிவு விலை வாகனம் களமிறங்க போகுதா!

இருப்பினும், தற்போது நிறுவனம் வெளியாகியிருக்கும் அறிவிப்பு பல்வேறு யூகிப்புகளை வித்திடும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, நிறுவனம் புதிதாக மலிவு விலை மின்சார இருசக்கர வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மஹிந்திரா குறித்து வைத்திருக்கும் அதே நாளில் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் ஓலா... மீண்டும் மலிவு விலை வாகனம் களமிறங்க போகுதா!

தற்போது விற்பனையில் இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால், ஏழை மற்றும் எளிய மக்களால் அந்த வாகனத்தை நுகர முடியாத சூழல் நிலவுகின்றது. இந்த தடையை போக்கும் பொருட்டு நிறுவனம் மலிவு விலை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மஹிந்திரா குறித்து வைத்திருக்கும் அதே நாளில் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் ஓலா... மீண்டும் மலிவு விலை வாகனம் களமிறங்க போகுதா!

நிறுவனம் மலிவு விலை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை நாட்டில் களமிறக்க உள்ளதாக கடந்த காலங்களில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. மேலும், ஏற்கனவே நிறுவனம் அதன் எஸ்1 விலை குறைவான மின்சார இருசக்கர வாகனத்தின் உற்பத்தியை நிறுத்தி வைத்திருக்கின்றது.

மஹிந்திரா குறித்து வைத்திருக்கும் அதே நாளில் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் ஓலா... மீண்டும் மலிவு விலை வாகனம் களமிறங்க போகுதா!

இவை அனைத்தையும் முன்னிட்டே நிறுவனம் விலைக் குறைவான மின்சார வாகனத்தை வரும் ஆகஸ்டு 15இல் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க இந்தியால 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு டிமாண்ட் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

மஹிந்திரா குறித்து வைத்திருக்கும் அதே நாளில் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் ஓலா... மீண்டும் மலிவு விலை வாகனம் களமிறங்க போகுதா!

இதை உறுதிப்படுத்தும் வகையில் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஹீரோ, எலெக்ட்ரிக், ஒகினாவா ஆட்டோ டெக், ஆம்பியர் உள்ளிட்ட நிறுவனங்களின் மின்சார வாகனங்கள் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அதிகபட்சமாக 112 சதவீத வளர்ச்சியை ஹீரோ எலெக்ட்ரிக் பெற்றிருக்கின்றது.

மஹிந்திரா குறித்து வைத்திருக்கும் அதே நாளில் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் ஓலா... மீண்டும் மலிவு விலை வாகனம் களமிறங்க போகுதா!

நிறுவனம் 8953 யூனிட் இருசக்கர வாகனங்களை 2022 ஜூலையில் விற்பனைச் செய்திருக்கின்றது. இதற்கு அந்நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் மலிவு விலையைக் கொண்டிருப்பதே காரணமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஒகினாவா ஒட்டுமொத்தமாக 8093 யூனிட்டுகளையும், ஆம்பியர் 6313 யூனிட்டுகளையும் விற்பனைச் செய்திருக்கின்றது.

மஹிந்திரா குறித்து வைத்திருக்கும் அதே நாளில் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் ஓலா... மீண்டும் மலிவு விலை வாகனம் களமிறங்க போகுதா!

இந்த அனைத்து நிறுவனங்களும் குறைவான விலையில், அதிகளவில் மின்சார இருசக்கர வாகன தேர்வுகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக அவை விற்பனையில் சக்கைப்போடுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே ஓலா எலெக்ட்ரிக் வரும் 15ம் தேதி புதுமுக தயாரிப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here