Homeசினிமா செய்திகள்மார்லன் பிராண்டோவின் கடிதம்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்கர் குழு

மார்லன் பிராண்டோவின் கடிதம்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்கர் குழு


உலகம் முழுக்க எத்தனையோ கேங்க்ஸ்டர் கதைகள் வந்திருக்கலாம். அவற்றுக்கெல்லாம் முன்னோடி தி காட்ஃபாதர் திரைப்படம்.

மேரியோ புஸோவின் `தி காட்ஃபாதர்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ஃப்ரான்சிஸ் ஃபோர்டு கொப்பல்லாவின் இயக்கத்தில் மார்லன் பிராண்டோவின் நடிப்பில் 1972-ல் வெளியானது. இதன் நேர்த்தியான திரைக்கதை, மார்லன் பிராண்டோவின் யதார்த்தமான நடிப்பு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இப்படி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், 1973-ம் ஆண்டு நடைபெற்ற 45-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த திரைப்படம் மற்றும் இப்படத்தில் நடித்த மார்லன் பிராண்டோவிற்குச் சிறந்த நடிகருக்கான விருது உள்ளிட்ட மூன்று ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றது.

நடிகை சாஷின் லிட்டில் பெதர்

ஆனால், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடைபெற்ற இவ்விழாவில் நடிகர் மார்லன் பிராண்டோ கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அமெரிக்காவின் பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த நடிகை சாஷின் லிட்டில் பெதர் கலந்து கொண்டார். அப்போது விருது அறிவிக்கப்பட்டபோது மேடைக்குச் சென்ற சாஷின் விருதை வாங்காமல் மார்லன் பிராண்டோ கொடுத்த கடிதத்தை வாசிக்கத் தொடங்கினார். அதில் “திரைத்துறையில் அமெரிக்கப் பூர்வகுடிகள் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதால் மார்லன் பிராண்டோ இந்த விருதை ஏற்க மறுத்துவிட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அனைவரது முன்னிலையிலும் வாசித்துக் காட்டினார்.

இதையடுத்து இந்த நிகழ்வு ஹாலிவுட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் நடிகை சாஷினுக்குத் திரைத்துறையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன, பல அவமதிப்புகளை அவர் எதிர்கொண்டார். இந்நிலையில் தற்போது நடிகை சாஷினுக்கு 75 வயதாகும் நிலையில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஸ்கர் குழு நடிகை சாஷினிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இது பற்றி ஆஸ்கர் குழுவின் முன்னாள் தலைவர் டேவிட் ரூபின் எழுதியுள்ள கடிதத்தில் “திரைத்துறையில் நீங்கள் எதிர்கொண்ட இழப்பையும் சுமையையும் ஈடு செய்ய முடியாது. உங்களது துணிச்சல் நீண்ட காலமாக அங்கீகரிக்கப்படவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Must Read