Home Sports விளையாட்டு செய்திகள் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்: இந்திய அணியின் கேப்டனான மதுரை சச்சின் சிவா வைக்கும் கோரிக்கை என்ன? | Madurai cricketer Sachin Siva becomes Indian physically challenged cricket team captain

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்: இந்திய அணியின் கேப்டனான மதுரை சச்சின் சிவா வைக்கும் கோரிக்கை என்ன? | Madurai cricketer Sachin Siva becomes Indian physically challenged cricket team captain

0
மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்: இந்திய அணியின் கேப்டனான மதுரை சச்சின் சிவா வைக்கும் கோரிக்கை என்ன? | Madurai cricketer Sachin Siva becomes Indian physically challenged cricket team captain

தனிப்பட்ட முறையில் 115 ரன்கள் அவுட் ஆகாமல் விளையாடி தேசிய அளவில் சாதனை செய்தேன். சென்னை அணியின் கேப்டனாக இருந்தபோது துபாயில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொள்ள கமல்ஹாசன் ஸ்பான்சர் செய்து உறுதுணையாக இருந்தார்.

இந்திய அளவிலான அணியில் அப்போது நான் ஒருவன்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். இந்த நிலையில்தான் இந்த கேப்டன் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஒருபக்கம் இந்த பொறுப்பு மகிழ்ச்சியாக இருந்தாலும் எங்களைப்போன்றவர்கள் பயிற்சி எடுப்பதிலிருந்து போட்டிகளுக்குச் சென்று விட்டு வரும் வரை பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். எங்களுக்கு யாரும் எந்தவித உதவிகளும் செய்வது கிடையாது.

சச்சின் சிவா

சச்சின் சிவா

நார்மலான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆதரவு தரக்கூடியவர்கள் எங்களது விளையாட்டுக்கு ஆதரவு தராமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

எங்கள் விளையாட்டை உலகத் தரத்திற்கு ஒளிபரப்பு செய்யத் தொலைக்காட்சிகள் யாரும் முன்வரவில்லை. ஒரு போட்டிக்குச் செல்ல, செய்துவரும் வேலைகளை விட்டுவிட்டுச் செல்வதால் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கிறோம். இங்கு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களும் கஷ்டப்பட்டு வருகிறோம்.

எங்களுக்கான அங்கீகாரம் என்பது இல்லாமல் இருந்துவருகிறது. நார்மல் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்குக் கொடுக்கக்கூடிய சலுகைகளை எங்களுக்கும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here