Home Sports Cricket `மீண்டு வாங்க Men in Blue!’ – தொடர் வெற்றிகள் டு `தொடர்’ தோல்வி; இங்கே யாரிடம், என்ன பிரச்னை? | Lessons we should learn from India’s failure in the Asia Cup 2022

`மீண்டு வாங்க Men in Blue!’ – தொடர் வெற்றிகள் டு `தொடர்’ தோல்வி; இங்கே யாரிடம், என்ன பிரச்னை? | Lessons we should learn from India’s failure in the Asia Cup 2022

0
`மீண்டு வாங்க Men in Blue!’ – தொடர் வெற்றிகள் டு `தொடர்’ தோல்வி; இங்கே யாரிடம், என்ன பிரச்னை? | Lessons we should learn from India’s failure in the Asia Cup 2022

[ad_1]

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பவர்பிளேவிலேயே இந்திய அணி 62 ரன்கள் எடுத்து அசத்தியது. ஆனால் அந்தத் தொடக்கத்தை அவர்களால் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக ரன் சேர்க்கவே இல்லை. விராட் கோலியும் கடைசி கட்டத்தில் பவுண்டரிகள் அடிக்க முடியாமல் தடுமாறினார். அதனால் கடைசியில் 181 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி.

அடுத்து பந்துவீச்சிலும் ஒரு சொதப்பல். ஆசிஃப் அலியின் கேட்சை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டது பெரும் பேசுபொருளானது. அதுமட்டுமல்லாமல் ஆட்டத்தின் 19வது ஓவரில் புவனேஷ்வர் குமார் 19 ரன்கள் விட்டுக்கொடுத்தது பாகிஸ்தானின் வெற்றியை எளிமையாக்கியது. இருந்தாலும் அனைவரும் அர்ஷ்தீப் பற்றியே விவாதித்ததால் அந்தப் போட்டியில் புவியின் ஓவர் பெரிதாகப் பேசப்படவில்லை.

ரோஹித் சர்மா, அர்ஷ்தீப் சிங்

ரோஹித் சர்மா, அர்ஷ்தீப் சிங்
Anjum Naveed

இலங்கை அணிக்கெதிரான போட்டியிலும் கிட்டத்தட்ட இவை எல்லாமே மீண்டும் அரங்கேறின. ரோஹித் ஷர்மா மட்டும் சிறப்பாக ஆட, மற்ற அனைவருமே சொதப்பினார்கள். அதனால் இந்தியா 173 ரன்கள்தான் எடுத்தது. இலங்கை வெற்றி பெற 2 ஓவர்களுக்கு 21 ரன்கள் தேவை என்றபோது இம்முறையும் 19வது ஓவரில் ரன்களை வாரி வழங்கினார் புவனேஷ்வர் குமார். என்ன, 5 ரன்கள் குறைவாக 14 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இப்போது இந்திய அணி மீது அளவு கடந்த விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. ரோஹித் ஷர்மா, புவி, கே.எல்.ராகுல், கோலி எனப் பலரும் விமர்சனத்துக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். கோலி பாகிஸ்தானுக்கு எதிராக நல்ல ரன்ரேட் வைத்திருக்கவில்லை, ராகுல் சரியான தொடக்கம் கொடுக்கவில்லை, புவி சரியாக ஆட்டத்தை முடிக்கவில்லை, ரோஹித் ஒரு கேப்டனாக பல முடிவுகளைச் சரியாக எடுக்கவில்லை, களத்தில் அவர் நடந்துகொண்ட விதம் சரியில்லை என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

[ad_2]

Source link

sports.vikatan.com

லோகு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here