Home சினிமா செய்திகள் யாரு அந்த ராக்ஸ்டார்.. பள்ளி விழாவிற்காக மாணவர்களின் வேற லெவல் திட்டம்.. ஓகே சொல்லும் மலர் டீச்சர்! | Kanaa kaanum kaalangal new promo released and the students plan with Rockstar

யாரு அந்த ராக்ஸ்டார்.. பள்ளி விழாவிற்காக மாணவர்களின் வேற லெவல் திட்டம்.. ஓகே சொல்லும் மலர் டீச்சர்! | Kanaa kaanum kaalangal new promo released and the students plan with Rockstar

0
யாரு அந்த ராக்ஸ்டார்.. பள்ளி விழாவிற்காக மாணவர்களின் வேற லெவல் திட்டம்.. ஓகே சொல்லும் மலர் டீச்சர்! | Kanaa kaanum kaalangal new promo released and the students plan with Rockstar

[ad_1]

கனா காணும் காலங்கள் தொடர்

கனா காணும் காலங்கள் தொடர்

விஜய் டிவியின் சீரியல்கள் தொடர்ந்து பல ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவை. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சேனலில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் தற்போது வரை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக காணப்படுகின்றன. குறிப்பாக 90 கிட்ஸ்கள் வெறித்தனமாக பார்த்த தொடர்களில் இதுவும் ஒன்று.

அடுத்த லெவலுக்கு நகர்ந்த நடிகர்கள்

அடுத்த லெவலுக்கு நகர்ந்த நடிகர்கள்

இந்தத் தொடரில் நடித்த ஜோ, ராகவி, சங்கவி, பாண்டி, உன்னி, ரிஷி உள்ளிட்டவர்கள் இந்தத் தொடரின்மூலம் அடுத்தக்கட்டங்களுக்கு தங்களை உயர்த்திக் கொண்டனர். பிளாக் பாண்டி என்று அழைக்கப்பட்ட பாண்டி இந்த சீரியலுக்கு பிறகு அங்காடித் தெரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரசிகர்களை கட்டிப்போட்ட தொடர்

ரசிகர்களை கட்டிப்போட்ட தொடர்

ராகவி கேரக்டரில் நடித்த தீபா தென்றல் சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். இதேபோல இம்ரான் திரைத்துறையில் 3 படங்களுக்கு மேல் சிறப்பான கதாபாத்தரங்களில் நடித்து புகழ்பெற்றார். இந்தத் தொடர் அந்த அளவிற்கு ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டது. தற்போதும் இந்தத் தொடர் ஒளிப்பரப்பானால் கண்டிப்பாக சிறப்பான வெற்றியை பெறும்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

இந்தத் தொடரின் மூலம் தங்களது பள்ளிக் காலங்களுக்கே ரசிகர்கள் சென்றனர். ஸ்கூல், லேப், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசியரியர் என இந்தத் தொடரில் வரும் அனைத்துமே பசுமை மாறாமல் ரசிகர்கள் நினைவில் காணப்படுகிறது. இந்தத் தொடருடன் சேர்த்து 4 சீசன்கள் வெளியான போதிலும் முதல் சீசன் கொடுத்த உற்சாகத்தை ரசிகர்கள் மறக்காமல் உள்ளனர்.

வெப் தொடர்

வெப் தொடர்

இந்நிலையில் தற்போது இந்தத் தொடர் மீண்டும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெப் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. தீபிகா வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த், தேஜா வெங்டேஷ் ஆகிய புதுமுக நடிகர்கள் மாணவர்களாக நடித்து வருகின்றனர். நடிகர் ராஜேஷ் பள்ளியின் நிறுவனர் சக்திவேலாக நடித்து வருகிறார். ராஜ்மோகன் பிடி மாஸ்டராக நடித்துள்ளார்.

மாணவர்கள் திட்டம்

மாணவர்கள் திட்டம்

இந்நிலையில் பள்ளியின் விழாவிற்காக மாணவர்கள் அனைவரும் சிறப்பான பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ராக்ஸ்டாராக திரைத்துறையில் கலக்கிவரும் அசோக் தங்களது பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற விஷயம் தெரியவருகிறது.

ஆசிரியர்கள் பிளான்

ஆசிரியர்கள் பிளான்

இப்போது அவரை தங்களது பள்ளி விழாவிற்கு அழைப்பது, அதையொட்டி தங்களது பள்ளியை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்துவது என்று மாணவர்கள் திட்டமிட்டு ஆசிரியர்கள் மலர் மற்றும் ஜெர்ரி ஆகியோரிடம் கூறுகின்றனர். அவர்களும் அசோக்கை பள்ளி விழாவிற்கு அழைப்பது குறித்து திட்டம் தீட்டுகின்றனர்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த கனா காணும் காலங்கள் தொடர் தற்போது காலத்திற்கேற்க வெப் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருவதால் மிஸ் செய்த எபிசோட்களையும் நினைத்த நேரத்தில் பார்த்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here