Home தமிழ் News ஆட்டோமொபைல் யூஸ்டு கார் மார்க்கெட்டை தான் அணுகனும்… விற்பனை நிறுத்தப்பட்ட 5 ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் கார்கள்!!

யூஸ்டு கார் மார்க்கெட்டை தான் அணுகனும்… விற்பனை நிறுத்தப்பட்ட 5 ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் கார்கள்!!

0
யூஸ்டு கார் மார்க்கெட்டை தான் அணுகனும்… விற்பனை நிறுத்தப்பட்ட 5 ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் கார்கள்!!

யூஸ்டு கார் மார்க்கெட்டை தான் அணுகனும்... விற்பனை நிறுத்தப்பட்ட 5 ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் கார்கள்!!

அந்த சமயங்களில் ரூ.12 லட்சத்திற்கு உள்ளான விலையில் விற்பனையில் இருந்த அவை தற்போதைக்கு பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் தான் விற்பனைக்கு கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த 5 செயல்திறன்மிக்க ஹேட்ச்பேக் கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யூஸ்டு கார் மார்க்கெட்டை தான் அணுகனும்... விற்பனை நிறுத்தப்பட்ட 5 ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் கார்கள்!!

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் முதன்முதலாக நுழைந்த போது அறிமுகப்படுத்திய ஹேட்ச்பேக் காரான போலோவிற்கு வரவேற்பு கிடைக்க துவங்கியதை அடுத்து, அதில் கொண்டுவரப்பட்ட டர்போ வெர்சன் தான் போலோ ஜிடி ஆகும். இருப்பினும் இந்த கார் தற்சமயம் விற்பனையில் இல்லை.

யூஸ்டு கார் மார்க்கெட்டை தான் அணுகனும்... விற்பனை நிறுத்தப்பட்ட 5 ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் கார்கள்!!

ஆதலால் போலோ ஜிடி காரை வாங்க நினைப்பவர்கள் யூஸ்டு கார் மார்க்கெட்டை தான் அணுக வேண்டும். இதில் பொருத்தப்பட்ட 1.4 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் அதிகப்பட்சமாக 104 பிஎச்பி-ஐ வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடன் வழங்கப்பட்ட போலோ ஜிடி காரை தற்சமயம் யூஸ்டு கார் மார்க்கெட்டில் ரூ.6 லட்சத்தில் ரூ.10 லட்சம் வரையிலான விலையில் வாங்கலாம்.

யூஸ்டு கார் மார்க்கெட்டை தான் அணுகனும்... விற்பனை நிறுத்தப்பட்ட 5 ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் கார்கள்!!

ஃபியாட் அபார்த் புண்டோ

இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த மிகவும் ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் கார்களுள் ஃபியாட் இந்தியா நிறுவனத்தின் அபார்த் புண்டோவும் ஒன்று. ஆனால் தற்சமயம் இந்திய சந்தையில் ஃபியாட் பிராண்டும் இல்லை, அதன் அபார்த் புண்டோ காரும் இல்லை.

யூஸ்டு கார் மார்க்கெட்டை தான் அணுகனும்... விற்பனை நிறுத்தப்பட்ட 5 ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் கார்கள்!!

இந்த காரில் அதிகப்பட்சமாக 145 பிஎச்பி மற்றும் 212 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.4 லிட்டர் டி-ஜெட் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டது. ஃபியாட் நிறுவனம் இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கவில்லை. அபார்த் புண்டோவை தற்சமயம் ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையிலான விலைகளில் வாங்கலாம்.

யூஸ்டு கார் மார்க்கெட்டை தான் அணுகனும்... விற்பனை நிறுத்தப்பட்ட 5 ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் கார்கள்!!

ஃபோர்டு ஃபிகோ 1.5

ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் என்பதற்கு முன்பாக, ஃபோர்டு ஃபிகோ ஆனது ஒரு சமயத்தில் இந்தியாவில் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்றாக விளங்கியது. ஆனால் இதன் கதையும் ஃபியாட் அபார்த் புண்டோவை போலவே… ஃபோர்டு நிறுவனம் இந்தியாவை நடையை கட்டியதால், ஃபிகோ 1.5 காரின் விற்பனையும் நின்றது.

யூஸ்டு கார் மார்க்கெட்டை தான் அணுகனும்... விற்பனை நிறுத்தப்பட்ட 5 ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் கார்கள்!!

இதன் 2ஆம் தலைமுறை மாடலில் ஃபோர்டு நிறுவனம் 1.5 லிட்டர் டிஐ-விசிடி பெட்ரோல் என்ஜினை அறிமுகப்படுத்தியது. அதிகப்பட்சமாக 110 பிஎச்பி மற்றும் 136 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்த இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டது.

யூஸ்டு கார் மார்க்கெட்டை தான் அணுகனும்... விற்பனை நிறுத்தப்பட்ட 5 ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் கார்கள்!!

மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ்

தற்சமயம் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகக்கூடிய பயணிகள் கார்கள் என்று எடுத்து பார்த்தோமேயானால், அதில் நிச்சயம் பலேனோவின் பெயரும் இருக்கும். ஆனால் ஏனோ இதன் ஆர்எஸ் வெர்சனுக்கு பெரியதாக வரவேற்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக பலேனோ ஆர்எஸ்-இன் விற்பனையை நிறுத்த வேண்டிய கட்டாயம் மாருதி சுஸுகிக்கு ஏற்பட்டது.

யூஸ்டு கார் மார்க்கெட்டை தான் அணுகனும்... விற்பனை நிறுத்தப்பட்ட 5 ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் கார்கள்!!

இன்னும் சொல்லப்போனால், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை சந்தையில் முதலில் பெற்ற மாருதி சுஸுகி கார் பலேனோ ஆர்எஸ் ஆகும். இந்த வகையில் இதில் வழங்கப்பட்ட 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜின் அதிகப்பட்சமாக 101 பிஎச்பி மற்றும் 150 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக விளங்கியது. இந்த பலேனோ காரை தற்சமயம் ரூ.6 லட்சம்- ரூ.9 லட்சம் வரையிலான விலைகளில் வாங்க முடியும்.

யூஸ்டு கார் மார்க்கெட்டை தான் அணுகனும்... விற்பனை நிறுத்தப்பட்ட 5 ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் கார்கள்!!

டாடா டியாகோ ஜேடிபி

கோயம்புத்தூரை சேர்ந்த ஜெயம் ஆட்டோமேட்டிவ் நிறுவனமும் டாடா மோட்டார்ஸும் ஜேடி ஸ்பெஷல் வாகனங்கள் என்ற பெயரில் கூட்டணி சேர்ந்து உருவாக்கிய ஆற்றல்மிக்க கார் தான் டியாகோ ஜேடிபி ஆகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த கூட்டணி நீண்ட காலத்திற்கு நீடிக்காததால் இந்த காரின் விற்பனையும் நின்று போனது.

யூஸ்டு கார் மார்க்கெட்டை தான் அணுகனும்... விற்பனை நிறுத்தப்பட்ட 5 ஆற்றல்மிக்க ஹேட்ச்பேக் கார்கள்!!

இருப்பினும் இந்த ஹேட்ச்பேக் காரை தற்போது யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஏறக்குறைய ரூ.5 லட்சத்தில் வாங்கலாம். டியாகோ ஜேடிபி காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டது. அதிகப்பட்சமாக 112 பிஎச்பி மற்றும் 150 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here