Home சினிமா செய்திகள் ரஜினி வாழ்க்கையை திருப்பிப்போட்ட பிரபல பட நிறுவனங்கள் | Famous film companies that turned Rajini’s life around

ரஜினி வாழ்க்கையை திருப்பிப்போட்ட பிரபல பட நிறுவனங்கள் | Famous film companies that turned Rajini’s life around

0
ரஜினி வாழ்க்கையை திருப்பிப்போட்ட பிரபல பட நிறுவனங்கள் | Famous film companies that turned Rajini’s life around

72 வயதிலும் ஓடும் குதிரை ரஜினி

72 வயதிலும் ஓடும் குதிரை ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் உச்ச நட்சத்திரம். 72 வயதிலும் நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கிறார். இதை அவர் தக்கவைக்கவும் செய்துள்ளார். அவருக்கு 10 ஆண்டுகளுக்குப்பின் நடிக்க வந்த அஜித், விஜய் இரண்டாம் மூன்றாம் இடத்தில் தான் இன்னமும் இருக்கின்றனர். ரஜினிகாந்த் இந்த இடத்தை எளிதாக அடையவில்லை. சிறிய வேடங்கள், வில்லன், ஹீரோவின் நண்பர், ஹீரோ என படிப்படியாக வந்து இந்த இடத்தை அடைந்துள்ளார்.

எம்ஜிஆர் இடத்தில் ரஜினியை வைத்த தேவர் ஃபிலிம்ஸ்

எம்ஜிஆர் இடத்தில் ரஜினியை வைத்த தேவர் ஃபிலிம்ஸ்

1975 ஆம் ஆண்டு சிறிய வேடத்தில் அறிமுகமானார் ரஜினி காந்த் ஆனால் மூன்றே வருடத்தில் அசுர வளர்ச்சி அடைந்தார். 1978 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் 15 படங்களுக்கு மேல் நடித்தார். அதில் பல படங்கள் முத்திரைப்பதித்த படங்கள். முள்ளும் மலரும், பிரியா, பைரவி, சங்கர் சலீம் சைமன் ஆகிய படங்கள் அதில் அடக்கம். ஆனாலும் எம்ஜிஆர் முதல்வர் ஆனதால் எம்ஜிஆருக்காக தயாரிக்கப்பட்ட கதையை ரஜினியை வைத்து தேவர் ஃபிலிம்ஸ் எடுத்தனர். இதனால் எம்ஜிஆர் இடத்தில் ரஜினி என மதிப்பு உயர்ந்தது. அந்தப்படம் தாய்மீது சத்தியம். சிவாஜியை வைத்து ஒருபடம் கூட தயாரிக்காத தேவர் ஃபிலிம்ஸ் எம்ஜிஆருக்கு பின் ரஜினிக்கு அந்த இடத்தை கொடுத்தது பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.

எம்ஜிஆருக்காக வைத்திருந்த கதை, ரஜினியை தேர்வு செய்த தேவர் ஃபிலிம்ஸ்

எம்ஜிஆருக்காக வைத்திருந்த கதை, ரஜினியை தேர்வு செய்த தேவர் ஃபிலிம்ஸ்

முதன்முதலில் மிகப்பெரிய பேனர் ரஜினியை வைத்து படம் எடுத்தது தாய் மீது சத்தியம் படமே. அதன் பின்னர் அவர்கள் அன்னை ஓர் ஆலயம், நான் போட்ட சவால், அன்புக்கு நான் அடிமை என அடுத்தடுத்து 3 படங்களை எடுத்தனர். கமல்-ஸ்ரீதேவியை வைத்து எடுத்த தாயில்லாமல் நானில்லை படத்திலும் ரஜினி ஒரு கேமியோ ரோல் பண்ணியிருப்பார். ரஜினியை வைத்து படம் எடுத்த அடுத்த பெரிய நிறுவனம் சுஜாதா சினி ஆர்ட்ஸ். நடிகர் பாலாஜியும் மோகன்லாலின் மாமனார் நடிகர் பாலாஜி அந்நிறுவனத்தை நடத்தியவர். சிவாஜி கணேசனை வைத்து அதிக அளவில் இந்தி படங்களை தழுவி படம் எடுத்தவர். எம்ஜிஆரை வைத்து ஒரு படம் கூட எடுக்காதவர். அவரும் ரஜினியை வைத்து பில்லா படம் எடுத்தார்.

சிவாஜியை வைத்து மட்டுமே படம் எடுத்த கே.பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ்

சிவாஜியை வைத்து மட்டுமே படம் எடுத்த கே.பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ்

பில்லா படம் இந்தியில் அமிதாப் நடித்த டான் படத்தின் தழுவல் ஆகும். இதில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்தார். அமிதாப்பின் பாணியை ரஜினி கைகொள்ள ஆரம்பித்தது இதன் பின்னர்தான் எனலாம். அதே ஆண்டில் நடித்த தேவர் பிலிம்சின் அன்புக்கு நான் அடிமை படத்திலும் அமிதாப் பாணியில் காமெடி கலந்த ஆக்‌ஷன் ஹீரோவாக பின்னியிருப்பார். எம்ஜிஆர், சிவாஜியை மட்டுமே வைத்து எடுத்த இரண்டு நிறுவனங்கள் ரஜினியை அணுகியது குறுகிய காலத்தில் ரஜினிக்கு கிடைத்த அங்கிகாரம் எனலாம்.

ஏவிஎம் நிறுவனமும் ரஜினியும்

ஏவிஎம் நிறுவனமும் ரஜினியும்

இதற்கு பின் ரஜினியை அணுகிய பெரிய நிறுவனம் ஏவிஎம். ரஜினியை வைத்து பிரம்மாண்டமான படமான முரட்டுக்காளை படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. இந்தப்படத்தில் முதன் முறையாக ஹீரோ ஜெய்ஷங்கர் வில்லனாக அவதாரம் எடுத்தார். படத்தில் பாடல், சண்டைக்காட்சிகள் மிகப்பிரபலமடைந்தது. ஏவிஎம் உடன் ஆரம்பித்த ரஜினியின் பந்தம் பாயும்புலி, போக்கிரி ராஜா, மனிதன், ராஜாசின்னரோஜா, எஜமான், பல வெற்றிப்படங்களை கொடுத்தது. அதில் கடைசியாக சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படமும் அடக்கம்.

எம்ஜிஆரை ஹீரோவாக வைத்து படம் எடுத்த சத்யா மூவிசில் ரஜினி

எம்ஜிஆரை ஹீரோவாக வைத்து படம் எடுத்த சத்யா மூவிசில் ரஜினி

1981 ஆம் ஆண்டு ரஜினிக்கு முதன்முறை சறுக்கல் ஏற்பட்டது. இதே காலக்கட்டத்தில் வந்த கழுகு, கர்ஜனை இரண்டுப்படங்களும் சரியாக போகவில்லை. அதே நேரம் சத்யா மூவீஸ் என எம்ஜிஆரின் மேலாளர் பின்னர் அமைச்சரான ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ் எம்ஜிஆரை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நிறுவனம் ரஜினியை வைத்து எடுத்த ராணுவ வீரன் படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்தப்படத்தின் மூலம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தமிழில் வில்லனாக அறிமுகமானார். அவர் பின்னர் ரஜினியை வைத்து மாப்பிள்ளை படத்தை தயாரித்தார். ரஜினிக்கு திருப்பு முனை ஏற்படுத்திய பாட்சா படத்தை தயாரித்ததும் சத்யா மூவீஸ் நிறுவனமே.

எம்ஜிஆரின் நிறுவனத்தை தொடர்ந்து சிவாஜியின் நிறுவனத்திலும் ரஜினி

எம்ஜிஆரின் நிறுவனத்தை தொடர்ந்து சிவாஜியின் நிறுவனத்திலும் ரஜினி

ரஜினியை வைத்து படம் எடுத்த மற்றொரு நிறுவனம் சிவாஜி கணேசனின் சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் முதன் முதலில் 1992 ஆம் ஆண்டு மன்னன் படத்தில் நடித்தார். விஜயசாந்திக்கு இதில் ரஜினிக்கு இணையான வேடம். படம் பெரிய வெற்றியை பெற்றது. ரஜினியின் வாழ்க்கையை திருப்பியதில் சிவாஜி பிலிம்ஸுக்கு பெரும் பங்கு உண்டு பாபா பட தோல்விக்கு பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்த நினைத்தார் ரஜினி, ஆனால் அவரது எண்ணத்தை மாற்றிய சிவாஜி ஃபிலிம்ஸ் அவரை அணுகியபோது முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அதிக மேக்கப்புடன் நடித்தார் ரஜினி. அந்தப்படம் சந்திரமுகி 800 நாட்கள் ஓடியது.

ரஜினியை அடையாளப்படுத்திய தயாரிப்பாளர்கள்

ரஜினியை அடையாளப்படுத்திய தயாரிப்பாளர்கள்

ரஜினியை வித்தியாசமாக காட்டிய இயக்குநர் மணிரத்னத்தின் அண்ணன் ஜிவி தயாரித்த ஜிவி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான தளபதி படத்தில் நடித்தார் ரஜினி. அதேபோல் ரஜினியின் வாழ்க்கையில் வசூலை வாரிக்குவித்த கபாலி படத்தினை தயாரித்தவர் கலைப்புலி தாணு. இந்தப்படத்தை இயக்கிய பா.ரஞ்சித் பின்னர் தனுஷின் தயாரிப்பில் காலா படத்தை இயக்கினார். இது ரஜினிக்கு பேர் சொல்லும் ஒரு படமாகும். ரஜினியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய கவிதாலயாவை ரஜினி எந்நாளும் மறக்க முடியாது. ஆணிவேறாக இருந்த பாலசந்தர் பல படங்களை ரஜினியை வைத்து தயாரித்துள்ளார். அதேபோல் முள்ளும் மலரும், பைரவியின் தயாரிப்பாளர்களும் ரஜினியை முதன்முதலாக அங்கீகரித்தவர்கள் ஆவர்.

ரஜினியும் சன் பிக்சர்ஸும்

ரஜினியும் சன் பிக்சர்ஸும்

ரஜினி நடித்த மற்றொரு பெரிய நிறுவனம் சன் பிக்சர்ஸ். மிகுந்த பொருட் செலவில் இயக்குநர் சங்கரை வைத்து எடுத்த எந்திரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அடுத்து சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பேட்ட, அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் ரஜினி நடித்தார். தற்போது ஜெயிலர் படமும் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவர உள்ளது. சன்பிக்சர்ஸ் ரஜினியின் தாய் வீடு போல ரஜினி என்ன கேட்டாலும் செய்து தர அவர்கள் தயாராக உள்ளனர். ஜெயிலர் படத்திற்காக இதுவரை வாங்கியதிலேயே அதிக சம்பளத்தை ரஜினி வாங்கியதாக சினிமா வட்டாரத்தில் தகவல்.

ரஜினியும் லைகாவும்

ரஜினியும் லைகாவும்

ரஜினியின் எந்திரன் பெரு வெற்றி பெற்றதை அடுத்து மிகப்பெரிய நிறுவனமான லைகா எந்திரன் இரண்டாம் பாகத்தை எடுக்க முன்வந்தது. 2.0 என பெயரிடப்பட்ட படத்தை இயக்குநர் சங்கரே படத்தை இயக்கினார். மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் அக்‌ஷயகுமார் வில்லனாக நடித்தார். இப்படம் ரஜினியின் திரை வாழ்க்கையில் சூப்பர் வசூல் செய்து கொடுத்த படம் ஆகும். அதன் பின்னர் ரஜினியை வைத்து தர்பார் படத்தை லைகா தயாரித்தது.

தற்போதும் லைகாவின் தயாரிப்பில் ரஜினி

தற்போதும் லைகாவின் தயாரிப்பில் ரஜினி

ரஜினிகாந்த் சமீப ஆண்டுகளில் பல இயக்குநர்கள் படத்தில் நடித்தாலும், இரண்டே நிறுவனங்கள் தயாரிக்கும் படத்தில் தான் நடிக்கிறார். ஒன்று சன் பிக்சர்ஸ் மற்றொன்று லைகா. தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினி நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஒருபடத்தை அவரது மகள் இயக்க அதில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். மற்றொரு படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குவதாகவும் நீண்ட ஆண்டுகளுக்கு பின் வடிவேலுவும், அரவிந்த சாமியும் அவருடன் இணைவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here