Home Sports விளையாட்டு செய்திகள் ரிஷப் பண்ட் (எ) ஸ்பைடர் மேன்… காபாவில் கடந்த ஆண்டு உருவான ஒரு சூப்பர் ஹீரோ! | Rishabh Pant – the real-life Spiderman who announced his superpower in Gabba last year

ரிஷப் பண்ட் (எ) ஸ்பைடர் மேன்… காபாவில் கடந்த ஆண்டு உருவான ஒரு சூப்பர் ஹீரோ! | Rishabh Pant – the real-life Spiderman who announced his superpower in Gabba last year

0
ரிஷப் பண்ட் (எ) ஸ்பைடர் மேன்… காபாவில் கடந்த ஆண்டு உருவான ஒரு சூப்பர் ஹீரோ! | Rishabh Pant – the real-life Spiderman who announced his superpower in Gabba last year

[ad_1]

இவை அனைத்தையும் இவர் செய்திருப்பது 24 வயதில்! மார்வெல் ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் குழந்தைத் தனத்திலிருந்து முழு ஹீரோவாக மாற மூன்று படங்களை அவகாசமாக எடுத்துக்கொண்டுள்ளது. திரையில் பார்க்கும் கதாபாத்திரத்திற்கே அத்தகு அவகாசம் தேவைப்படுகையில், நமது நிஜ உலக ஸ்பைடர்மேநிற்கும் அவகாசம் வழங்குவதுதானே நியாயம்.

ஸ்பைடர்மேன் ஃபார் பிரம் ஹோம் படத்தில், ஹாப்பி கதாபாத்திரம் பீட்டரிடம் ஒரு வசனத்தை சொல்லும்: “டோனி ஸ்டார்க் எப்பவும் ஒரு குழப்பவாதி. அவரோட முடிவுகள்ல தெளிவாவே இருக்கமாட்டார். ஆனா அவர் வாழ்நாள்ல சரியானதுனு உறுதியா நம்புன ஒரு முடிவுனா, அது உன்ன தேர்ந்தெடுத்ததுதான்” என்று. கோலியின் கேப்டன்சி பற்றி நாமும் அப்படித்தான் நினைத்திருக்கிறோம். அவர் ஒரு குழப்பவாதி என்று. பல முடிவுகளைத் தவறாக எடுத்திருக்கிறார். ஆனால், ரிஷப் பண்ட் மீது, அவர் ஆட்ட அணுகுமுறை மீது எப்போதும் நம்பிக்கை வைத்திருந்தார். அவரைப் போலவே ரவி சாஸ்திரி, டிராவிட் போன்றோரும் ஆரம்பத்திலிருந்தே பண்ட் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அதையெல்லாம் நிரூபிக்கும் வகையில், பண்ட்டின் சாகசப் பயணங்களும் தொடர்ந்துகொண்டே உள்ளன.

ஆஸ்திரேலியா தொடரின்போது, ஸ்டம்ப் மைக்கில், “ஸ்பைடர்மேன்… ஸ்பைடர்மேன்” என்று பண்ட் விளையாட்டாக பாடப்போய் அவருக்கு இந்த பட்டப்பெயர் வந்திருந்தாலும், அந்தக் கதாபாத்திரத்துக்கு பொருந்திப்போகிறவர் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். அவரை முதலில் வெறுத்தவர்களையும் சிலந்திவலை பின்னி தன் ரசிகர்களாக ஈர்த்துக்கொண்டும் இருக்கிறார்!

[ad_2]

Source link

sports.vikatan.com

த. நந்த குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here