Home தமிழ் News ஆட்டோமொபைல் ரூ.10 லட்சத்தை நெருங்கிய எம்ஜி ஆஸ்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை- ரூ.35,000 வரையில் ஆஸ்டரின் விலைகள் அதிகரிப்பு

ரூ.10 லட்சத்தை நெருங்கிய எம்ஜி ஆஸ்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை- ரூ.35,000 வரையில் ஆஸ்டரின் விலைகள் அதிகரிப்பு

0
ரூ.10 லட்சத்தை நெருங்கிய எம்ஜி ஆஸ்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை- ரூ.35,000 வரையில் ஆஸ்டரின் விலைகள் அதிகரிப்பு

[ad_1]

ரூ.10 லட்சத்தை நெருங்கிய எம்ஜி ஆஸ்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை- ரூ.35,000 வரையில் ஆஸ்டரின் விலைகள் அதிகரிப்பு

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய ஆஸ்டர் நடுத்தர-அளவு எஸ்யூவி காரினை கடந்த அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுக விலையாக ரூ.9.78 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஆஸ்டரின் அறிமுக விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சத்தை நெருங்கிய எம்ஜி ஆஸ்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை- ரூ.35,000 வரையில் ஆஸ்டரின் விலைகள் அதிகரிப்பு

ஆஸ்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக எம்ஜி ஆஸ்டரின் ஆரம்ப நிலை ஸ்டைல் மேனுவல் வேரியண்ட்டின் விலை ரூ.9.78 லட்சத்தில் இருந்து ரூ.9.98 லட்சமாக அதிகரித்துள்ளது. அதிகப்பட்சமாக ஆஸ்டர் எஸ்யூவி கார்களின் விலைகள் ரூ.35,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன.

ரூ.10 லட்சத்தை நெருங்கிய எம்ஜி ஆஸ்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை- ரூ.35,000 வரையில் ஆஸ்டரின் விலைகள் அதிகரிப்பு

இந்தியாவில் எம்ஜி மோட்டாரின் ஆஸ்டர் மாடல் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப், சாவி என்ற 5 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஸ்டைல் வேரியண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ.20,000 உயர்த்தப்பட்டுள்ளதாக முன்னரே கூறிவிட்டோம். சூப்பர் வேரியண்ட் மேனுவல் & சிவிடி தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.10 லட்சத்தை நெருங்கிய எம்ஜி ஆஸ்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை- ரூ.35,000 வரையில் ஆஸ்டரின் விலைகள் அதிகரிப்பு

இதில் சூப்பர் மேனுவல் வேரியண்ட்டின் விலை ரூ.22,000-மும், சிவிடி கியர்பாக்ஸ் உடனான சூப்பர் வேரியண்ட்டின் விலை ரூ.30,000-மும் உயர்த்தப்பட்டுள்ளன. சூப்பர் சிவிடி வேரியண்ட் மட்டுமின்றி, ஸ்மார்ட் வேரியண்ட்டின் ட்ரிம் நிலைகள் அனைத்தின் விலைகளும் தலா ரூ.30,000 அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஷார்ப் வேரியண்ட்டிலும் மேனுவல் & சிவிடி தேர்வுகளின் விலைகள் தலா ரூ.30,000 உயர்ந்துள்ளன.

ரூ.10 லட்சத்தை நெருங்கிய எம்ஜி ஆஸ்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை- ரூ.35,000 வரையில் ஆஸ்டரின் விலைகள் அதிகரிப்பு

ஆனால் டர்போ-ஆட்டோமேட்டிக் தேர்வுடனான ஷார்ப் வேரியண்ட்டின் விலை ரூ.22,000 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. டாப் சாவி வேரியண்ட்டின் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.35,000 உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் ஆஸ்டரின் அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.38 லட்சங்களில் இருந்து ரூ.17.73 லட்சங்களாக அதிகரித்துள்ளது. உயர்-நிலை சாவி வேரியண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் வழங்கப்படுவதில்லை.

ரூ.10 லட்சத்தை நெருங்கிய எம்ஜி ஆஸ்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை- ரூ.35,000 வரையில் ஆஸ்டரின் விலைகள் அதிகரிப்பு

சிவிடி மற்றும் டர்போ-ஆட்டோமேட்டிக் தேர்வுகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. அதேபோல் பிரத்யேகமான சிவப்பு நிற பெயிண்ட் தேர்வு சாவி வேரியண்ட்டிற்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்திய சந்தையில் மொத்தம் 2 விதமான என்ஜின் தேர்வுகளில் எம்ஜி ஆஸ்டர் நடுத்தர-அளவு எஸ்யூவி கார் சந்தைப்படுத்தப்படுகிறது. இதில் ஒன்றான 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 108 எச்பி மற்றும் 144 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ரூ.10 லட்சத்தை நெருங்கிய எம்ஜி ஆஸ்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை- ரூ.35,000 வரையில் ஆஸ்டரின் விலைகள் அதிகரிப்பு

இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் & 8-ஸ்டெப் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. மற்றொரு என்ஜின் தேர்வான 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 138 எச்பி மற்றும் 220 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்குகிறது. இதனுடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே கொடுக்கப்படுகிறது.

ரூ.10 லட்சத்தை நெருங்கிய எம்ஜி ஆஸ்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை- ரூ.35,000 வரையில் ஆஸ்டரின் விலைகள் அதிகரிப்பு

தொழிற்நுட்ப வசதிகளை பொருத்தவரையில், எம்ஜி ஆஸ்டர் உட்புறத்தில் மிக முக்கிய சிறப்பம்சமாக ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே & இணைப்பு கார் தொழிற்நுட்பத்திற்கு இணக்கமான தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை 10.1 இன்ச்சில் பெரிய அளவில் பெறுகிறது. இதனுடன் இந்த எஸ்யூவி காரின் டேஸ்போர்டில் 7.0 இன்ச்சில் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் வழங்கப்படுகிறது.

ரூ.10 லட்சத்தை நெருங்கிய எம்ஜி ஆஸ்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை- ரூ.35,000 வரையில் ஆஸ்டரின் விலைகள் அதிகரிப்பு

இவற்றுடன் நடுத்தர-அளவு எஸ்யூவி கார் பிரிவிலேயே முதல் மாடலாக நிலை-2 அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்புகளை ஆஸ்டர் பெறுகிறது. இதன் மூலமாக தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், சாலையில் ஒரே பாதையை தொடர உதவும் அம்சம் போன்றவை ஆஸ்டரில் கிடைக்க பெறுகின்றன. விற்பனையில் ஆஸ்டருக்கு ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், நிஸான் கிக்ஸ் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

ரூ.10 லட்சத்தை நெருங்கிய எம்ஜி ஆஸ்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை- ரூ.35,000 வரையில் ஆஸ்டரின் விலைகள் அதிகரிப்பு

ஆஸ்டர் மட்டுமின்றி, எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் பிரபலமான ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி கார்களின் விலைகளையும் புதிய ஆண்டின் துவக்கத்தில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஹெக்டர் & ஹெக்டர் ப்ளஸ் கார்களின் டிசிடி (ட்யுவல்-க்ளட்ச் டிரான்ஸ்மிஷன்) கியர்பாக்ஸ் தேர்வுகளின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here