Home சினிமா செய்திகள் வனிதாவை கேள்வி கேட்க பயமா?… சரியான நோஸ் கட் கொடுத்த கமல்… அல்டிமேட் அட்டகாசம் ! | bigg boss ultimate: kamal haasan slams vanitha Vijayakumar

வனிதாவை கேள்வி கேட்க பயமா?… சரியான நோஸ் கட் கொடுத்த கமல்… அல்டிமேட் அட்டகாசம் ! | bigg boss ultimate: kamal haasan slams vanitha Vijayakumar

0
வனிதாவை கேள்வி கேட்க பயமா?… சரியான நோஸ் கட் கொடுத்த கமல்… அல்டிமேட் அட்டகாசம் ! | bigg boss ultimate: kamal haasan slams vanitha Vijayakumar

[ad_1]

வனிதா ஆர்மி

வனிதா ஆர்மி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வைத்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். ஓடிடியில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. முன்னதாக பிக் பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களை அறிவித்தபோதே, யார் வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை, எங்களுக்கு வனிதாக்கா வந்தே ஆகணும் என்று ஆதரவாளர்கள் குரல் கொடுத்தனர்.

டீதூளை ஒளித்து வைத்தார்

டீதூளை ஒளித்து வைத்தார்

வனிதா வந்ததும் வராததுமா பஞ்சாயத்தை கூட்டிவிட்டார். முதல் நாளே டாஸ்கில் கலந்து கொள்ளமாட்டேன் என்று போட்டியாளர்களிடம் தர்க்கம் செய்தார். அதே போல, காஃபி வேணும்… காஃபி வேணும் என்று பித்து பிடித்தது போல சுற்றி வந்த வனிதா காஃபி பொடி கிடைக்காத ஆத்திரத்தில் டீ தூளை பிக் பாஸ் திரும்ப வாங்கிவிட்டார் என்று பொய் சொல்லி, டீதூளை ஒளித்து வைத்து பிரச்சினையை கிளப்பினார்.

வனிதா அலப்பறை

வனிதா அலப்பறை

அதுமட்டும் இல்லாமல், காஃபி தூள் வந்ததும், இந்த பாட்டிலை என்னை கேட்காமல் யாரும் தொடக்கூடாது எனக்கு மட்டும் தான் காஃபி, யாருக்கு காஃபி வேணுமோ என்னைக் கேட்டுத்தான் குடிக்கனும் என்று புது ரூலை போட்டார். இதனால் கடுப்பான அபிராபி. வனிதாவிடம் வாக்குவதத்தில் ஈடுபட்டார். நான் செய்ததுதான் சரி என்பது போல அலப்பறை செய்தார் வனிதா.

வனிதாவை தட்டிகேட்க பயம்

வனிதாவை தட்டிகேட்க பயம்

தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில், டீதூளை ஒளித்து வைத்தது குறித்து கமல் கேள்வி கேட்டுள்ளார். அதில், கொடுத்த பொருளை பிக் பாஸ் வாங்கியதாக எந்த சீசனிலும் இல்லை, வனிதாவைத்தவிர வேறு யாராவது ஒளிந்து வைத்து இருந்தால், வீடு இப்படி இருந்து இருக்குமா என கேட்கிறார். இதற்கு , சினேகன், வனிதா அக்கா மீது எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கிறது. இதனால், யாரும் தட்டி கேட்கவில்லை என்கிறார்.

சரியான நோஸ் கட்

சரியான நோஸ் கட்

இதைக்கேட்ட கமல், உங்களின் தைரியமும் புரட்சியும் எனக்கு புடிச்சி இருக்கு, இதை இன்னும் பெரிய விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் இது சின்ன விஷயம் என்று வனிதாவுக்கு சரியான நோஸ் கட் கொடுத்துள்ளார். இதைக்கேட்ட வனிதாவின் முகம் அப்படியே மாறிவிட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் லைவ் நிறுத்தப்பட்டுள்ளது. மாலை 6.30 மணிக்கு கமல்ஹாசன் வரும் போது மீண்டும் லைவ் துவங்கப்பட உள்ளது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here