Home Sports விளையாட்டு செய்திகள் வரலாறு படைக்கவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி – சர்வதேச அரங்கில் ஆயிரமாவது ODI விளையாடும் முதல் அணி! | India the first team to achieve 1000th ODI landmark in international cricket

வரலாறு படைக்கவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி – சர்வதேச அரங்கில் ஆயிரமாவது ODI விளையாடும் முதல் அணி! | India the first team to achieve 1000th ODI landmark in international cricket

0
வரலாறு படைக்கவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி – சர்வதேச அரங்கில் ஆயிரமாவது ODI விளையாடும் முதல் அணி! | India the first team to achieve 1000th ODI landmark in international cricket

[ad_1]

இப்பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தப்படியாக ஆஸ்திரேலியா (958 போட்டிகள்), பாகிஸ்தான் (932 போட்டிகள்) முதலிய நாடுகள் உள்ளன. இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டியில் கேப்டனாக இருந்தவர் அஜய் வடேக்கர், 100வது போட்டியில் கபில் தேவ், 200வது போட்டியில் அசாருதீன், 300வது போட்டியில் சச்சின் டெண்டுல்கர், 400வது போட்டியில் அசாருதீன், 500வது போட்டியில் சௌரவ் கங்குலி, 600வது போட்டியில் விரேந்தர் சேவாக், 700, 800, 900வது போட்டிகளில் எம்.எஸ். தோனியும் இந்திய அணிக்கு கேப்டன்களாகச் செயல்பட்டனர். இந்த வரிசையில் 1000வது போட்டியில் இந்திய அணியை தலைமைதாங்க உள்ளார் ரோஹித் சர்மா.

ஒரு நாள் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. 2011-ம் ஆண்டு டிசம்பர் 8-தேதி மேற்திந்திய தீவுகள் அணிக்கு எதிராக சேவாக் அடித்த 219 ரன்களின் உதவியோடு இந்தியா குவித்த 418 ரன்களே அந்த அதிகபட்ச ஸ்கோர்.

தனிப்பட்ட அணிகளுக்கு எதிராக இலங்கையுடன் மட்டும் 161 போட்டிகளை விளையாடி உள்ளது இந்தியா. இதில் 93 வெற்றிகளையும் 56 தோல்விகளையும் பெற்றுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவுடன் 144 போட்டிகள், மேற்கிந்திய தீவுகளுடன் 133 போட்டிகள், பாகிஸ்தானுடன் 132 போட்டிகள், நியூசிலாந்துடன் 110 போட்டிகள், இங்கிலாந்துடன் 103 போட்டிகள் விளையாடியுள்ளது இந்தியா.

[ad_2]

Source link

sports.vikatan.com

ஜோ.வியானி விஷ்வா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here