Home Sports Cricket வார்னே போன்ற லெஜண்டுகள் ஆராதித்த ஃப்ளிப்பர் டெலிவரி; இந்த டி20 யுகத்தில் காணாமல் போனது ஏன்? | Once celebrated by Shane Warne, Flipper is the forgotten variation of leg spin

வார்னே போன்ற லெஜண்டுகள் ஆராதித்த ஃப்ளிப்பர் டெலிவரி; இந்த டி20 யுகத்தில் காணாமல் போனது ஏன்? | Once celebrated by Shane Warne, Flipper is the forgotten variation of leg spin

0
வார்னே போன்ற லெஜண்டுகள் ஆராதித்த ஃப்ளிப்பர் டெலிவரி; இந்த டி20 யுகத்தில் காணாமல் போனது ஏன்? | Once celebrated by Shane Warne, Flipper is the forgotten variation of leg spin

வார்னே பந்தை வீசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது முப்பரிமாணத்தில் நகர்கிறது (ஆம்! முன்னோக்கி பயணிக்கிறது, உயரம் கடக்கிறது, டர்ன் ஆகியோ, Drift-ன் மூலமாகவோ பக்கவாட்டிலும் நகர்கிறது). அதனைச் சந்திக்கும் பேட்ஸ்மேனின் மனநிலை என்ன?! அவர் எப்படிப்பட்ட பந்தைவீசப் போகிறார் என்ற எண்ணம் தலையில் ஓடிக்கொண்டே இருக்கும்.

Warne Flipper

Warne Flipper
Cricket Australia

பொதுவாக, அப்பந்தை பற்றிக் கணிக்க பேட்ஸ்மேனுக்கு மூன்று வாய்ப்புகளுண்டு. முதலில், வார்னேயின் கிரிப். சுனில் நரைன் விஷயத்தில் சங்கக்காரா சொன்னதைப்போல் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருக்கும்போதே கவனம் அதிலிருந்தால் தப்பிக்கலாம்.

இரண்டாவதாக பந்து காற்றில் இருக்கும்போது, எப்படிச் சுழல்கிறது என்பதைக் கவனிக்கலாம்.

மூன்றாவதாக பந்து தரையில் பட்டபிறகு, எப்படிப் பயணிக்கிறது என்பதைக் கவனித்து அதற்கேற்ப அதிவேகமாக ரியாக்ட் செய்வது. இதில் கால அவகாசம் மிகக்குறைவு. நிறைய பேட்ஸ்மேன்கள் வார்னேயிடம் சிக்கியதும் இங்கேதான்.

முப்பரிமாணம் தவிர்த்து, வார்னேயின் நான்காவது பரிமாணமும் ஒன்று உண்டு! அது பந்தின் வேகம்…

கும்ப்ளேயும் ஃப்ளிப்பரைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், அவரைப் போலில்லாமல் வார்னேயின் ஃப்ளிப்பர் தவிர்த்த மற்ற பந்துகள் குறைவான வேகத்துடன்தான் பயணிக்கும். அவரது பயிற்சியாளரான டெர்ரி ஜென்னர் பயிற்றுவித்த பாடமது. “எந்த வேகத்தில் உன்னால் பந்தினை அதிகமாகச் சுழல வைக்க முடிகிறதோ அதுவே உனக்கான சரியான வேகம்” என்று சொன்னதைதான் வார்னே இறுதிவரை பின்பற்றினார்.

அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here