Home சினிமா செய்திகள் விஜய்யின் வாரிசுடன் மோதும் பிரபாஸின் ஆதிபுருஷ்!

விஜய்யின் வாரிசுடன் மோதும் பிரபாஸின் ஆதிபுருஷ்!

0
விஜய்யின் வாரிசுடன் மோதும் பிரபாஸின் ஆதிபுருஷ்!

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், ‘வாரிசு’. இதன் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். சரத்குமார், ஷாம், குஷ்பு உட்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கும் இந்தப் படம் குடும்பக் கதையைக் கொண்டது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகிறது.

இந்நிலையில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படம் பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது. ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்தப் படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். இதில் கீர்த்தி சனோன், சைஃப் அலிகான் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில்தான் ‘வாரிசு’ படமும் ரிலீஸ் ஆகிறது. இதனால் பொங்கலுக்கு விஜய்யும் பிரபாஸும் மோத இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here