Home தமிழ் News ஆட்டோமொபைல் விமானிகளாக தாய்-மகள்… ஒன்றாக விமானத்தை இயக்கி சாதனை!! அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்!

விமானிகளாக தாய்-மகள்… ஒன்றாக விமானத்தை இயக்கி சாதனை!! அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்!

0
விமானிகளாக தாய்-மகள்… ஒன்றாக விமானத்தை இயக்கி சாதனை!! அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்!

விமானிகளாக தாய்-மகள்... ஒன்றாக விமானத்தை இயக்கி சாதனை!! அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்!

அமெரிக்காவில் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்ஸில் விமானியாக பணியாற்றுபவர் ஹோலி பெடிட். இவரது மகள் கீலி பெடிட். இவரும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸில் விமானியாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே பல முறை விமானங்களை இயக்கியுள்ளனர்.

விமானிகளாக தாய்-மகள்... ஒன்றாக விமானத்தை இயக்கி சாதனை!! அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்!

ஆனால் இருவரும் ஒன்றாக இணைந்து சமீபத்தில் தான் விமானத்தை இயக்கியுள்ளனர். இவர்களது இந்த சுவாரஸ்யமான பயணத்தை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் விதமாக சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

கீலி குழந்தை பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இவர்கள் இருவரும் காட்டுவதில் இருந்து துவங்கும் இந்த வீடியோ பல்லாயிரக்கணக்கானோரின் லைக்குகளுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் கேப்டன் ஹோலி பெடிட், “நாங்கள் இங்கே இருப்பதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறோம்.

விமானிகளாக தாய்-மகள்... ஒன்றாக விமானத்தை இயக்கி சாதனை!! அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்!

சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸின் விமான கேப்டன் டெக்கில் பணியாற்றும் முதல் தாய்-மகள் நாங்கள்தான். கனவு நினைவாகிவிட்டது. முதலாவதாக, நான் இந்த தொழிலை கண்டு அதை காதலித்தேன். பின்னர் எனது குழந்தைகளில் ஒருவர் இதில் விழுந்து இந்த வாழ்க்கையையும் காதலித்தேன்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

விமானிகளாக தாய்-மகள்... ஒன்றாக விமானத்தை இயக்கி சாதனை!! அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்!

மேலும், இந்த இன்ஸ்டாகிராம் பதிவில், உனது தாய் உடன் இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை முடிக்க வாழ்த்துகள் கீலி என சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகிலேயே விமானத்தை இயக்கும் முதல் தாய் மற்றும் மகள் என்ற பெருமைக்கு ஹோலி பெடிட் மற்றும் கீலி பெடிட் சொந்தக்காரர்கள் ஆகியுள்ளனர்.

விமானிகளாக தாய்-மகள்... ஒன்றாக விமானத்தை இயக்கி சாதனை!! அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்!

இவர்களது முதல் விமான பயணத்தில் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸின் விமானம் 3658 பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானத்தை பெடிட் ஜோடி அமெரிக்காவின் டென்வர் நகரத்தில் இருந்து செயிண்ட் லூயிஸ் நகரம் வரையில் பயணிகளுடன் இயக்கியுள்ளனர். கல்லூரியில் படிப்பை முடித்த பிறகு ஹோலி பெடிட் விமான பணிப்பெண்ணாக தனது தொழிலை துவங்கினார்.

விமானிகளாக தாய்-மகள்... ஒன்றாக விமானத்தை இயக்கி சாதனை!! அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்!

கல்லூரி படிப்பை முடித்த பிறகு ஹோலி பெடிட் விமான பணிப்பெண்ணாக தனது தொழிலை துவங்கினார். அதன்பின்னரே விமானியாக தன்னை மேம்படுத்தி கொண்டு விமானங்களை இயக்க ஆரம்பித்துள்ளார். இடையில் திருமணம், குழந்தைகள் என ஆன பின்பும் பைலட் பணியை விடாமல் தொடர்ந்துள்ளார், ஹோலி பெடிட்.

விமானிகளாக தாய்-மகள்... ஒன்றாக விமானத்தை இயக்கி சாதனை!! அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்!

முழுநேர தாயாக பணிபுரிந்து தனது குடும்பத்தை வளர்த்துக்கொண்டே, ஹோலி பெடிட் விமான பயிற்சி வகுப்புகளை எடுத்து தனது நற்சான்றிதழ்களை பெற்றார் என்று சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஒர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. பின்னர் கீலி பெடிட்டும் தனது தாய் ஹோலியை போலவே விமானம் ஓட்டுவதை விரும்பினார்.

விமானிகளாக தாய்-மகள்... ஒன்றாக விமானத்தை இயக்கி சாதனை!! அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்!

மேலும், 14 வயதில் தானும் விமானியாக வேண்டும் என்று கனவு கண்டார். 2017இல் அவர் தனது பைலட் உரிமத்தை பெற்று, விமான நிறுவனத்தில் பயிற்ச்சியாளராக பணியாற்ற தொடங்கினார். அதனை தொடர்ந்து 2018இல் கீலி விமானியாக பணியமர்த்தப்பட்டார். தற்போது 2022இல் இறுதியாக தனது தாய் ஹோலி உடனும் இணைந்து விமானத்தை இயக்கி சாதித்துவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here