Home தமிழ் News ஆட்டோமொபைல் வெறும் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார்களுக்கு இவ்ளோ கிராக்கியா… விற்பனையில் சக்கைபோடு போடும் மாருதி கார்கள்!

வெறும் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார்களுக்கு இவ்ளோ கிராக்கியா… விற்பனையில் சக்கைபோடு போடும் மாருதி கார்கள்!

0
வெறும் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார்களுக்கு இவ்ளோ கிராக்கியா… விற்பனையில் சக்கைபோடு போடும் மாருதி கார்கள்!

[ad_1]

வெறும் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார்களுக்கு இவ்ளோ கிராக்கியா... விற்பனையில் சக்கைபோடு போடும் மாருதி கார்கள்!

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் ஒரு லட்சம் கிளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்களை விற்பனைச் செய்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. நிறுவனம் கிளான்ஸா காரை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதத்திலும், அர்பன் க்ரூஸர் கார் மாடலை 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் விற்பனைக்குக் கொண்டு வந்தது.

வெறும் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார்களுக்கு இவ்ளோ கிராக்கியா... விற்பனையில் சக்கைபோடு போடும் மாருதி கார்கள்!

இத்தகைய குறைந்த கால கட்டத்திலேயே இன்றைய நிலவரப்படி கிளான்ஸா கார் மாடல் 65 ஆயிரம் யூனிட்டுகளும், அர்பன் க்ரூஸர் கார் மாடல் 35 ஆயிரம் யூனிட்டுகளும் விற்பனையாகி இருக்கின்றன. இது மிக வரலாற்று சிறப்புமிக்க விற்பனை எண்ணிக்கையாகும்.

வெறும் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார்களுக்கு இவ்ளோ கிராக்கியா... விற்பனையில் சக்கைபோடு போடும் மாருதி கார்கள்!

டொயோட்டா நிறுவனத்தின் இந்த கார்கள் மாருதி சுசிகியின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட கார்கள் ஆகும். ஆம், தற்போது பலினோ எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்து வரும் கார் மாடலையே கிளான்ஸா என்ற பெயரிலும், விட்டாரா ப்ரெஸ்ஸா கார் மாடலை அர்பன் க்ரூஸர் என்கிற பெயரிலும் ரீபேட்ஜ் செய்து டொயோட்டா விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

வெறும் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார்களுக்கு இவ்ளோ கிராக்கியா... விற்பனையில் சக்கைபோடு போடும் மாருதி கார்கள்!

இவ்விரு கார் மாடல்களும் மாருதி பிராண்டிலும் நல்ல வரேவற்பைப் பெற்று வருகின்றது. இதே வரவேற்பையே தற்போது ரீபேட்ஜ் செய்யப்பட்ட நிலையிலும் தற்போது அக்கார்கள் பெற்று வருகின்றன. டொயோட்டா நிறுவனம் தனது எம்பளத்தை மட்டுமே மாற்றி இக்காரை விற்பனைக்கு வழங்கவில்லை. ரீபேட்ஜ் உடன் சேர்த்து சில பிரத்யேக வசதிகளையும் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு வழங்கி வருகின்றது.

வெறும் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார்களுக்கு இவ்ளோ கிராக்கியா... விற்பனையில் சக்கைபோடு போடும் மாருதி கார்கள்!

இதன் விளைவாகவே சற்று காஸ்ட்லியான விலையில் இவை விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. இருப்பினும், இந்தியர்கள் அக்கார் மாடல்களுக்கு சிறப்பான டிமாண்டை வழங்கி வருகின்றனர். அதேநேரத்தில், மாருதியின் இவ்விரு தயாரிப்புகளே டொயோட்டா நிறுவனத்தை தற்போது தூக்கி நிறுத்தும் வாகனங்களாகவும் மாறியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போதைய ஒரு லட்சம் யூனிட் விற்பனை தகவல் அமைந்துள்ளது.

வெறும் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார்களுக்கு இவ்ளோ கிராக்கியா... விற்பனையில் சக்கைபோடு போடும் மாருதி கார்கள்!

டொயோட்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் இக்கார்கள் 66 சதவீதம் இடத்தைப் பிடித்துள்ளன. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் கூட இக்கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இத்தகைய சிறப்பான வரவேற்பை இக்கார்கள் பெறுவதற்கு டொயோட்டா இந்த கார்களுக்கென பிரத்யேக வழங்கும் சில சிறப்பு சேவைகளும் முக்கிய காரணமாக இருக்கின்றது.

வெறும் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார்களுக்கு இவ்ளோ கிராக்கியா... விற்பனையில் சக்கைபோடு போடும் மாருதி கார்கள்!

டொயோட்டா நிறுவனம் இக்கார்களுக்கு டொயோட்டா ஸ்மைல்ஸ் வேல்யூ பேக்கேஜ் (Toyota Smiles Value packages), க்யூ சர்வீஸ் (Q Service), எக்ஸ்பிரஸ் மெயின்டனன்ஸ் 60 (Express Maintenance 60) உள்ளிட்ட சிறப்பு சேவைகளை கூடுதலாக வழங்கி வருகின்றது. இவற்றின் காரணமாகவும் இக்கார்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

வெறும் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார்களுக்கு இவ்ளோ கிராக்கியா... விற்பனையில் சக்கைபோடு போடும் மாருதி கார்கள்!

டொயோட்டா கிளான்ஸா இந்தியாவில் ரூ. 7.49 லட்சம் தொடங்கி ரூ. 9.45 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), ஹோண்டா ஜாஸ் (Honda Jazz), ஃபோக்ஸ்வேகன் போலோ (VW Polo), மற்றும் மாருதி பலினோ (Maruti Baleno) ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது.

வெறும் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார்களுக்கு இவ்ளோ கிராக்கியா... விற்பனையில் சக்கைபோடு போடும் மாருதி கார்கள்!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இந்தியாவில் ரூ. 8 லட்சத்து 72 ஆயிரம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உச்சபட்ச விலை ரூ. 11 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இக்கார் இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா (Maruti Vitara Brezza), கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon), ரெனால்ட் கைகர் (Renault Kiger), நிஸான் மேக்னைட் (Nissan Magnite), மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV300) உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here