Home தமிழ் News ஆட்டோமொபைல் ஹூண்டாய், கியா கார்களை வெறும் யுஎஸ்பி கேபிளை கொண்டு திருட முடியுமா? இவங்க சொல்றத நம்பவே முடியல!

ஹூண்டாய், கியா கார்களை வெறும் யுஎஸ்பி கேபிளை கொண்டு திருட முடியுமா? இவங்க சொல்றத நம்பவே முடியல!

0
ஹூண்டாய், கியா கார்களை வெறும் யுஎஸ்பி கேபிளை கொண்டு திருட முடியுமா? இவங்க சொல்றத நம்பவே முடியல!

ஹூண்டாய், கியா கார்களை வெறும் யுஎஸ்பி கேபிளை கொண்டு திருட முடியுமா? இவங்க சொல்றத நம்பவே முடியல!

இந்தியாவைபோல் வளர்ந்த நாடுகள் சிலவற்றிலும் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், அமெரிக்காவின் குறிப்பிட்ட சில நகரங்களில் அதிக செக்யூரிட்டியையும் தாண்டி திருடர்கள் தினந்தோறும் தங்களின் கை வரிசையைக் காண்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஹூண்டாய், கியா கார்களை வெறும் யுஎஸ்பி கேபிளை கொண்டு திருட முடியுமா? இவங்க சொல்றத நம்பவே முடியல!

ஆகையால், வாகன திருட்டு அங்கு அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் வாகன பயன்பாட்டாளர்கள் தங்களின் கார்கள் திருடர்கள் எளிதில் களவாடிச் செல்லும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். ஹூண்டாய் மற்றும் கியா கார்களை பயன்படுத்தி வரும் வாகன உரிமையாளர்களாக தங்களின் குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர்கள் ஆவார்கள்.

ஹூண்டாய், கியா கார்களை வெறும் யுஎஸ்பி கேபிளை கொண்டு திருட முடியுமா? இவங்க சொல்றத நம்பவே முடியல!

இவர்கள் தங்களின் கார்கள் எளிமையாக வெறும் ஒற்றை யுஎஸ்பி கேபிள் வாயிலாகவே திருடப்படப்படுவதாக குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். குறிப்பாக, 2011 மற்றும் அதற்கு பின்னர் தயாரிக்கப்பட்ட கியா கார்கள் சிலவும், 2015 மற்றும் அதற்கு பின்னர் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் கார்கள் சிலவும்தான் திருடர்களின் முக்கிய குறியாக இருப்பதாக கூறப்படுகின்றது.

ஹூண்டாய், கியா கார்களை வெறும் யுஎஸ்பி கேபிளை கொண்டு திருட முடியுமா? இவங்க சொல்றத நம்பவே முடியல!

இவற்றையே வாகன திருடர்கள் மிக சுலபமாக யுஎஸ்பி கேபிளைக் கொண்ட அசால்டாக திருடிவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலே குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் மற்றும் கியா கார்களில் எஞ்ஜின் இம்மொபிலைசர் எனும் அம்சம் இடம் பெறவில்லை. இந்த அம்சம் இல்லாததே கியா மற்றும் ஹூண்டாய் கார்களே எளிதில் திருடப்படுவதற்கு காரணமாக இருக்கின்றது என கூறப்படுகின்றது.

ஹூண்டாய், கியா கார்களை வெறும் யுஎஸ்பி கேபிளை கொண்டு திருட முடியுமா? இவங்க சொல்றத நம்பவே முடியல!

எஞ்ஜின் இம்மொபிலைசர் அம்சம் கொண்ட காரை இயக்க கோடட் கீ அல்லது ஃபாப் முக்கிய தேவையாக இருக்கின்றது. இது இல்லாத காரணத்தினாலேயே குறிப்பிட்ட கார் மாடல்கள் அசால்டாக திருடப்பட்டிருக்கின்றன. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் இந்த அம்சம் இல்லாதது, யுஎஸ்பி கேபிள் வாயிலாக எஞ்ஜினை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக கூறப்படுகின்றது.

ஹூண்டாய், கியா கார்களை வெறும் யுஎஸ்பி கேபிளை கொண்டு திருட முடியுமா? இவங்க சொல்றத நம்பவே முடியல!

இதனை எவ்வாறு திருடர்கள் செய்கிறார்கள் என்பதனை ‘கியா பாய்ஸ்’ எனும் குழுவினர் செய்து காண்பித்திருக்கின்றனர். இத்தகைய ஓர் யுக்தியைக் கையாண்டு செயின்ட் லூயிஸ், சின்சினாட்டி, கொலம்பஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய நகர்புற பகுதிகள் பலவற்றில் கார் திருடர்கள் தங்களின் கை வரிசையைக் காண்பித்திருக்கின்றனர். ஆகையால், இதே யுக்தியைக் கையாண்டு எதிர்காலத்திலும் சில கியா, ஹூண்டாய் கார்கள் திருடப்படலாம் என அந்தந்த நிறுவன கார் பயன்பாட்டாளர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

ஹூண்டாய், கியா கார்களை வெறும் யுஎஸ்பி கேபிளை கொண்டு திருட முடியுமா? இவங்க சொல்றத நம்பவே முடியல!

ஆகையால், குறிப்பிட்ட ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட எஞ்ஜின் இம்மொபிலைசர் அம்சம் இல்லாத ஹூண்டாய் மற்றும் கியா கார் பயன்பாட்டாளர்கள் தங்களின் கார்களை சற்று அதிக பாதுகாப்புடன் காக்க வேண்டும் என்பது அவசியமாகியுள்ளது. ஏற்கனவே ஒரு சிலர் தங்களின் வாகனங்களைப் பாதுகாக்கும் விதமாக அலாரம், தனி பூட்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தத் தொடங்கிவிட்டதாக அமெரிக்காவின் வாகன உலகம் சார்ந்து இயங்கும் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஹூண்டாய், கியா கார்களை வெறும் யுஎஸ்பி கேபிளை கொண்டு திருட முடியுமா? இவங்க சொல்றத நம்பவே முடியல!

Source: motor1

சந்தையில் தற்போது திருட்டைத் தவிர்க்கும் பொருட்டு பல கருவிகள் விற்கப்படுகின்றன. ஸ்டியரிங் வீல் லாக் மற்றும் கியர் லாக் போன்ற பல்வேறு அம்சங்கள் விற்கப்படுகின்றன. இதுதவிர, ஜிபிஎஸ் கருவி மற்றும் தெஃப்ட் அலாரம் போன்ற அம்சங்களும் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இவை காரை பாதுகாக்கவும், நம்மை நிம்மதியாகவும் இருக்க உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here