Home Sports விளையாட்டு செய்திகள் 2 ஆண்டுகள் 71 விக்கெட்டுகள்… அஸ்வினின் சாதனைப் பயணம் | Ashwin is highest wicket taker in WTC | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

2 ஆண்டுகள் 71 விக்கெட்டுகள்… அஸ்வினின் சாதனைப் பயணம் | Ashwin is highest wicket taker in WTC | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

0

[ad_1]

Ashwin-is-highest-wicket-taker-in-WTC

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐசிசி அறிவித்த பின்பு இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் அதிகளவு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையும் படைத்தார் அஸ்வின்.

2019-ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை அறிவித்தது. இதனையடுத்து இந்திய டெஸ்ட் அணி வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் தோல்வியும், மற்ற அனைத்திலும் வெற்றிப் பெற்ற இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதி தோல்வியடைந்தது.

image

ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த 2 ஆண்டுகளில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அதிக விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார். அவர் 14 டெஸ்டில் விளையாடி 71 விக்கெட் சாய்த்தார். அவருக்கு அடுத்தபடியாக கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) 70 விக்கெட்டும், பிராட் (இங்கிலாந்து) 69 விக்கெட்டும், சவுத்தி (நியூசிலாந்து) 56 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

அதேபோல பேட்ஸ்மேன்களை பொறுத்தவர் ஆஸ்திரேலியாவின் லபுசேன் 13 டெஸ்டில் 1675 ரன் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். இங்கிலாந்து ஜோரூட்டுக்கு 2-வது இடம் கிடைத்தது. அவர் 1660 ரன் எடுத்தார்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here