Home தமிழ் News ஆட்டோமொபைல் 2022 கவாஸாகி நிஞ்ஜா 300 பைக் விற்பனைக்கு அறிமுகம்… இந்த பைக்கை வாங்கும் பிளான் இருக்கா? இதோ முக்கிய விபரங்கள்!

2022 கவாஸாகி நிஞ்ஜா 300 பைக் விற்பனைக்கு அறிமுகம்… இந்த பைக்கை வாங்கும் பிளான் இருக்கா? இதோ முக்கிய விபரங்கள்!

0
2022 கவாஸாகி நிஞ்ஜா 300 பைக் விற்பனைக்கு அறிமுகம்… இந்த பைக்கை வாங்கும் பிளான் இருக்கா? இதோ முக்கிய விபரங்கள்!

[ad_1]

2022 கவாஸாகி நிஞ்ஜா 300 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இந்த பைக்கை வாங்கும் பிளான் இருக்கா? இதோ முக்கிய விபரங்கள்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கவாஸாகி (Kawasaki), அதன் 2022 நிஞ்ஜா 300 (2022 Ninja 300) பிஎஸ்6 தர மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இப்பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 3.37 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

2022 கவாஸாகி நிஞ்ஜா 300 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இந்த பைக்கை வாங்கும் பிளான் இருக்கா? இதோ முக்கிய விபரங்கள்!

கடந்த ஆண்டில் என்ன விலையில் விற்கப்பட்டதோ, அதே விலையிலேயே 2022 வெர்ஷனும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. கவாஸாகியின் இந்த செயல் ஒட்டுமொத்த இருசக்கர வாகன பிரியர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

2022 கவாஸாகி நிஞ்ஜா 300 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இந்த பைக்கை வாங்கும் பிளான் இருக்கா? இதோ முக்கிய விபரங்கள்!

அறிமுகத்தைத் தொடர்ந்து மோட்டார்சைக்கிள்களுக்கான புக்கிங் பணிகள் தற்போது நாட்டில் தொடங்கியுள்ளன. கவாஸாகி நிஞ்ஜா 300 ஓர் ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் ரக பைக்காகும். கணிசமான மாற்றங்களுடன் அது விற்பனைக்கு வந்திருக்கின்றது. புதிய கிராஃபிக்குகள் மற்றும் மூன்று விதமான நிற தேர்வுகளில் இப்பைக் விற்பனைக்குக் கிடைக்கும்.

2022 கவாஸாகி நிஞ்ஜா 300 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இந்த பைக்கை வாங்கும் பிளான் இருக்கா? இதோ முக்கிய விபரங்கள்!

லைம் கிரீன், கேன்டீ லைம் கிரீன் மற்றும் இபோனி ஆகியவையே அந்த மூன்று நிற தேர்வுகள் ஆகும். இதில், சிக்னேச்சர் லைம் கிரீன் நிற தேர்வில் மட்டும் அதே பழைய பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்ற இரு நிற தேர்வுகளிலும் புதிய மாற்றங்களுடன் கலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

2022 கவாஸாகி நிஞ்ஜா 300 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இந்த பைக்கை வாங்கும் பிளான் இருக்கா? இதோ முக்கிய விபரங்கள்!

அந்தவகையில், கேன்டீ லைம் கிரீன் நிற தேர்வில் கிரே கலர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் சில மாற்றங்கள் மற்ற இரு நிற தேர்வுகளிலும் வழங்கப்பட்டுள்ளன. ஆகையால், கவாஸாகி நிஞ்ஜா 300 பைக்கின் கவர்ச்சியான தோற்றம் சற்று கூடியிருக்கின்றது என்றே கூறலாம்.

2022 கவாஸாகி நிஞ்ஜா 300 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இந்த பைக்கை வாங்கும் பிளான் இருக்கா? இதோ முக்கிய விபரங்கள்!

அதேநேரத்தில், இந்த காஸ்மெட்டிக் மாற்றத்தைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் நிறுவனம் வழங்கவில்லை. பைக்கில் பிஎஸ்6 தர எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, 296 சிசி லிக்யூடு கூல்டு 8 வால்வுகள் கொண்ட டிஓஎச்சி பாரல்லல் ட்வின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2022 கவாஸாகி நிஞ்ஜா 300 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இந்த பைக்கை வாங்கும் பிளான் இருக்கா? இதோ முக்கிய விபரங்கள்!

இதில் கூடுதல் சிறப்பு வசதியாக த்ரோட்டில் வால்வுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மோட்டார் அதிகபட்சமாக 38 எச்பி பவரை 11,000 ஆர்பிஎம்மிலும், 26.1 என்எம் டார்க்கை 10,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

2022 கவாஸாகி நிஞ்ஜா 300 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இந்த பைக்கை வாங்கும் பிளான் இருக்கா? இதோ முக்கிய விபரங்கள்!

இத்துடன், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இது கியர்களை சுலபமாக மாற்ற உதவும். கவாஸாகி நிறுவனம் பைக்கின் எஞ்ஜினை ஹை டென்சைல் டைமண்ட் ஸ்டீல் ஃப்ரேமில் நிலை நிறுத்தியிருக்கின்றது. இப்பைக்கின் ஒட்டுமொத்த எடையே 179 கிலோ மட்டுமே ஆகும்.

2022 கவாஸாகி நிஞ்ஜா 300 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இந்த பைக்கை வாங்கும் பிளான் இருக்கா? இதோ முக்கிய விபரங்கள்!

தற்போது விற்பனையில் இருக்கும் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக் மாடலைக் காட்டிலும் இது மிக குறைவான எடை ஆகும். இதுமட்டுமின்றி, தனது போட்டியாளர்களைக் காட்டிலும் சற்று உயரம் குறைவான வாகனமாகவும் நிஞ்ஜா 300 உள்ளது. இதன் இருக்கை 780 மிமீட்டராக இருக்கின்றது.

2022 கவாஸாகி நிஞ்ஜா 300 பைக் விற்பனைக்கு அறிமுகம்... இந்த பைக்கை வாங்கும் பிளான் இருக்கா? இதோ முக்கிய விபரங்கள்!

கவாஸாகி நிஞ்ஜா 300 பைக் தற்போது இந்தியாவில் ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து மோட்டார்சைக்கிள்களுக்கும் போட்டியாக அமைந்துள்ளது. அந்தவகையில், கேடிஎம் ஆர்சி390, ஹோண்டா சிபி 300ஆர், பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் உள்ளிட்ட பைக் மாடல்களுக்கு இதன் வருகை போட்டியாக அமைந்திருக்கின்றது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here