[ad_1]
மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட 2022 பலேனோ (Baleno) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது பழைய மாடல் பலேனோவைக் காட்டிலும் பன்மடங்கு மதிப்பு கூட்டப்பட்ட அம்சங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது. அறிமுக விலையாக இந்த காருக்கு ரூ. 6.35 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வாகனத்திற்கு ரூ. 11 ஆயிரம் எனும் மிகக் குறைவான முன் தொகையில் புக்கிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. நெக்ஸா விற்பனையாளர்கள் வாயிலாக இந்த பணிகள் மிக அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆம், 2022 பலேனோவிற்கு மிக அதிகளவில் புக்கிங்குகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
சமீபத்தில் வெளியாகிய தகவலின்படி, சுமார் 16 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் இக்காருக்கு கிடைத்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே இன்று (பிப்ரவரி 23) ஃபேஸ்லிஃப்ட் பலேனோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஹெட்ஸ்-அப் திரை, 9 இன்ச் அளவுள்ள எச்டி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எச்டி திரையில் மற்றுமொரு சிறப்பு வசதியாக ஸ்மார்ட்-ப்ளே ப்ரோ ப்ளஸ் கார் இணைப்பு வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, இதுபோன்ற இன்னும் பல அம்சங்களை பலேனோ காரில் வேரியண்ட் வாரியாக மாருதி சுசுகி வழங்கியிருக்கின்றது. இந்த பதிவில் இதுகுறித்த தகவலையே நாம் பார்க்க இருக்கின்றோம். அதாவது, எந்தெந்த வேரியண்டில் என்னென்ன மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
சிக்மா, டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய நான்கு விதமான வேரியண்டுகளில் 2022 பலேனோ விற்பனைக்குக் கிடைக்கும். இதில் சிக்மா வேரியண்டில் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களை முதலில் பார்க்கலாம். இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த வேரியண்டுகளில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களையும் இதே பதிவில் பார்க்கலாம்;
சிக்மா (Sigma):
- ஹாலோஜன் புரஜெக்டர் ஹெட்லேம்ப் (Halogen projector headlamps)
- எல்இடி டெயில் லைட் (LED tail lights)
- ரியர் ஸ்பாய்லர் (Rear spoiler)
- பாடி நிறத்திலான பம்பர் (Body coloured bumpers)
- பவர் விண்டோக்கள் (அனைத்தும்) All power windows
- சாவியில்லா நுழைவு (Keyless entry)
- தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் (Automatic climate control)
- ரியர் டிஃபாக்கர் (Rear defogger)
- கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் (Gear shift indicator)
- டில்ட்-அட்ஜஸ்டபிள் ஸ்டியரிங் வீல் (Tilt-adjustable steering)
- மேனோ-க்ரோம் டிஎஃப்டி திரை (Monochrome TFT display)
- முன்பக்கத்தில் அட்ஜஸ்டபிள் ஹெட் ரெஸ்ட்டுகள் (Front adjustable head rests)
- இபிடி வசதிக் கொண்ட ஏபிஎஸ் (ABS with EBD)
- இரட்டை ஏர் பேக்குகள் (Dual airbags)
- ரியர் பார்க்கிங் சென்சார்கள் (Rear parking sensors)
- பிரேக் அசிஸ்ட் (Brake assist)
- ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் (High-speed alert system)
-உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டெல்டா (Delta)
[ad_2]
Source link