[ad_1]
பூஜா மிஸ்ரா குற்றச்சாட்டு
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பூஜா மிஸ்ரா, பாலிவுட்டில் வளர்ந்து வரும் என்னை குறித்து சத்ருகன் சின்ஹாவும் அவரது மனைவி பூனம் சின்ஹாவும் பாலியல் மோசடியை நடத்தி உள்ளனர். இதற்காக என் மீது சூன்யம் உள்ளிட்டவைகளை கையாண்டுள்ளனர். என்னை மயக்கமடைய வைத்து, என் மீது சூன்ய வேலைகள் செய்துள்ளனர்.
சத்ருகன் சின்ஹா மீது புகார்
என்னுடைய கன்னித்தன்மையை விற்று தான் சத்ருகன் சின்ஹா, ஃபேஷன் டிசைனராக ஆக முயற்சித்துக் கொண்டிருந்த தனது மகள் சோனாக்ஷி சின்ஹாவை நடிகையாக்கினார். மும்பை தங்கி, நடிகையாக வளர்ந்து வரும் என்னை குறிவைத்து கடந்த 17 வருடங்களாக சத்ருகன் சின்ஹாவும், அவரது மனைவியும் எனது சினிமா வாழ்க்கையை நாசமாக்கி விட்டனர்.
என் வாழ்க்கையை கெடுத்தவர்கள்
எனது அப்பாவும் சத்ருகன் சின்ஹாவும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள். இதனால் சத்ருகன் சின்ஹாவும் அவரது மனைவியும் என் அப்பாவை மூளை சலவை செய்து, பாலியல் தொழில் செய்வோர் மட்டுமே பாலிவுட்டில் பிழைப்பு நடத்துவதாகவும், அதனால் என்னை சினிமாவை விட்டு விலக்கி வைக்கும் படி என் அப்பாவிடம் கூறி உள்ளனர். 2005 ல் என் அப்பா ஓய்வுபெற்றவுடன் நாங்கள் புனே சென்று விட்டோம். ஆனால் சின்ஹா குடும்பத்தினர் தான் மீண்டும் மும்பை வரவழைத்தனர்.
சின்ஹா மீது திருட்டு புகார்
நான் வீடியோகான் கெஸ்ட் ஹவுசில் தங்கி இருந்த போது சின்கா தம்பதி என் மீது பில்லி சூன்யத்தை ஏவினர். எனக்கு கிடைக்க இருந்த 35 பட வாய்ப்புக்களை அவர்கள் தட்டிப் பறித்து விட்டனர். சத்ருகன் சின்ஹாவிற்கு, நான் அவரை விட சினிமாவில் பிரபலம் ஆகி விடுவேன் என்ற பயம். என்னுடைய ஸ்பான்சர்களையும் தட்டி பறித்துக் கொண்டனர். கிட்டதட்ட 7 ஆண்டுகள் ஒரே அப்பார்மெனட்டில் தான் எங்களின் குடும்பங்கள் வசித்தன. நான் சிங்கப்பூர் சென்றிருந்த போது அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து எனது பொருட்களை திருடி சென்று விட்டனர்.
எல்லாவற்றிற்கும் இவர்கள் தான் காரணம்
அந்த பொருட்களை சோனாக்ஷி சின்ஹாவிடம் கொடுத்து, போட்டோஷுட்களின் போது அதை பயன்படுத்த சொன்னார்கள். என்னுடைய கன்னித்தன்மையை விற்று தான் அவர் தன்னுடைய மகள் சோனாக்ஷி சின்காவை பெரிய நடிகையாக்கினார். எனக்கு திருமணம் நடைபெறாததற்கு காரணம் சத்ருகன் சின்ஹா தான். எனக்கு போதை பொருட்கள் கொடுத்து அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். நான் எனது சினிமா வாழ்க்கையில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு சத்ருகன் சின்ஹா மட்டும் தான் காரணம் என்றார்.
வீடியோ ஜாக்கி, நடிகை, மாடலான பூஜா மிஸ்ரா பிக்பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். இது தவிர இவர் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பல படங்களிலும் நடித்துள்ளார்.
[ad_2]
Source link