Home சினிமா செய்திகள் A movie released 160 languages worldwide on December 16 – தமிழ் News

A movie released 160 languages worldwide on December 16 – தமிழ் News

0
A movie released 160 languages worldwide on December 16 – தமிழ் News

[ad_1]

உலகம் முழுவதும் 160 மொழிகளில் சூப்பர்ஹிட்டான திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ’அவதார்’. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான இந்த படம் வசூலில் உலக சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் தயாரான இந்தப் படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் தமிழ் உள்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தி உட்பட பல வட இந்திய மொழிகளிலும் இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’அவதார்’ முதல் பாகம் உலகம் முழுவதும் சுமார் 2850 மில்லியன் டாலர் வசூல் செய்த நிலையில் ’அவதார் 2’ திரைப்படத்தின் வசூல் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here