Home Sports விளையாட்டு செய்திகள் alert chennai people Heavy rain with thunder and lightning in this area | சென்னை வாசிகளே எச்சரிக்கை! இந்த பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்

alert chennai people Heavy rain with thunder and lightning in this area | சென்னை வாசிகளே எச்சரிக்கை! இந்த பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்

0
alert chennai people Heavy rain with thunder and lightning in this area | சென்னை வாசிகளே எச்சரிக்கை! இந்த பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்

[ad_1]

வானிலை நிலவரம்: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல நாளை சென்னை, திருவள்ளூ,ர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, கரூர், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுநாள்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ALSO READ | நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

சென்னை வானிலை:

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன  மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

வங்க கடல் பகுதிகள் இன்றும் நாளையும் (26.11.2021,27.11.2021) குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும்,  இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோல வரும் 29  ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் இதன் காரணமாக 29.11.2021 மற்றும் 30.11.2021 ஆம் நாளில் அந்தமான் கடற் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

ALSO READ | சோகம்! மின்னல் தாக்கி மீனவர் பலி – போலீசார் விசாரணை

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

காயல்பட்டினம் (தூத்துக்குடி) 31, 

தூத்துக்குடி (தூத்துக்குடி) 27, 

திருச்செந்தூர் (தூத்துக்குடி) 25, 

நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 19, 

ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) 18, 

குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி) 16,  

வைப்பார் (தூத்துக்குடி) 15, 

காரைக்கால் (காரைக்கால்), திருவையாறு (தஞ்சாவூர்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), ஒட்டபத்திரம் (தூத்துக்குடி), பெலாந்துறை (கடலூர்) தலா 12, 

திருப்புவனம் (சிவகங்கை), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), சாத்தூர் (விருதுநகர்), பேராவூரணி (தஞ்சாவூர்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி) தலா 11, 

திண்டுக்கல் (திண்டுக்கல் ), திருவாரூர் (திருவாரூர்), பூடலூர் (தஞ்சாவூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), சிவகங்கை (சிவகங்கை) தலா 10,  

தாம்பரம் (செங்கல்பட்டு), மணிமுத்தாறு (திருநெல்வேலி), நன்னிலம் (திருவாரூர்), கேவிகே காட்டுக்குப்பம்  (காஞ்சிபுரம்), சத்யபாமா பல்கலைக்கழகம்  (செங்கல்பட்டு), செம்பரபாக்கம் (திருவள்ளூர்), கடம்பூர் (தூத்துக்குடி), மணியச்சி (தூத்துக்குடி), மணியச்சி (தூத்துக்குடி), மணியச்சி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி) தலா 9,

ALSO READ | நிலச்சரிவு காரணமாக தமிழகம் கேரளா இடையே போக்குவரத்து துண்டிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

zeenews.india.com

Zee News Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here