Home Sports விளையாட்டு செய்திகள் Anna University Conference 10 places across Tamil Nadu

Anna University Conference 10 places across Tamil Nadu

0
Anna University Conference 10 places across Tamil Nadu

[ad_1]

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வசம் உள்ள காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று காலை தொடங்கியது. பேரவை கூடியவுடன் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அப்போது பேசிய கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான கு.பிச்சாண்டி, “அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கு தனியாக கவுன்சிலிங் நடத்தி அதில் மாணவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ” அரசு கல்லூரிகளில் அந்தந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மாணவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நேரடியாக வாய்ப்புகள் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ஆன்லைனில் கலந்தாய்வு நடந்தால் எந்த அளவுக்கு குளறுபடிகள் இருந்தது என்பதை சென்ற ஆண்டு அண்ணா பல்கலையில் நடைபெற்ற கலந்தாய்விலேயே நாம் பார்த்து இருக்கிறோம் என குறிப்பிட்டார்.

மேலும்,  அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்குக் கூட தமிழகம் முழுவதும் 10 இடங்களில் நேர்முகமாக கலந்தாய்வு நடத்தி தேர்ந்தெடுக்க முடியுமா என்ற வகையில் அரசு ஆலோசனை செய்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் பொன்முடி ஆன்லைன் கலந்தாய்வே வேண்டாம் எனவும் அந்தந்த கல்லூரிகளில் எங்கு இடம் உள்ளதோ அங்கு நேரிடையாக விண்ணப்பித்து மாணவர்கள் சேரலாம் எனவும் கூறினார். மேலும் விண்ணப்பிக்காத மாணவர்களும் கல்லூரியில் சேருவதற்கான கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார். 

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் ஷவர்மாவிற்குத் தடையா?- அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

zeenews.india.com

Zee News Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here