Home Bollywood Brahmastra Review: பலவகை அஸ்திரங்கள், உலகைக் காக்கும் மாவீரன் – இந்திய அவெஞ்சர்ஸா இந்த `Astraverse’? | Can Brahmastra: Part One – Shiva revive Bollywood industry?

Brahmastra Review: பலவகை அஸ்திரங்கள், உலகைக் காக்கும் மாவீரன் – இந்திய அவெஞ்சர்ஸா இந்த `Astraverse’? | Can Brahmastra: Part One – Shiva revive Bollywood industry?

0
Brahmastra Review: பலவகை அஸ்திரங்கள், உலகைக் காக்கும் மாவீரன் – இந்திய அவெஞ்சர்ஸா இந்த `Astraverse’? | Can Brahmastra: Part One – Shiva revive Bollywood industry?

DJ-வாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்கும் சிவாவுக்கு இஷாவைப் பார்த்தவுடன் காதல். ஒரு கட்டத்தில், சிவாவுக்கு நெருப்பினால் ஒன்றுமே ஆகாது என்ற ரகசியத்தைக் கண்டறிகிறார் இஷா. தனக்குச் சம்பந்தமில்லாத ஒருவர், சிலரால் கொல்லப்படுவதையும் அவரிடமிருந்து அஸ்திரம் பறிக்கப்பட்டு தீயசக்திகள் தலைதூக்குவதையும் அருகிலிருந்து பார்த்ததுபோல உணர்கிறார் சிவா. அதைத் தடுத்து நிறுத்த, காதலி ஈஷாவுடன் ஆபத்திலிருக்கும் அடுத்த நபரைக் காக்க வாரணாசி செல்கிறார்.

‘பிரம்மாஸ்திரம்’ என்ற மாபெரும் அஸ்திரம் குறித்தும், பிற அஸ்திரங்களைக் காக்கும் மனிதர்கள் அடங்கிய ‘பிரம்மான்ஷ்’ என்ற ரகசியக் குழு குறித்தும் அறிந்துகொள்கிறார்கள். அஸ்திரங்களைக் கைப்பற்ற நினைக்கும் தீய சக்தியைத் தடுக்க, பிரம்மான்ஷ் குழுவின் குருவிடம் தஞ்சம் அடைகிறார்கள். சிவா உண்மையிலேயே யார், அவருக்கும் அஸ்திரங்களுக்கும் நெருங்கும் தீய சக்திக்கும் உண்டான தொடர்பு என்ன என்பதை ஃபேன்டஸி, ஆக்ஷன், சூப்பர்ஹீரோ வகையறா கதையாகச் சொல்கிறது இந்த ‘பிரம்மாஸ்திரா’.

Brahmastra Review | பிரம்மாஸ்திரா விமர்சனம்

Brahmastra Review | பிரம்மாஸ்திரா விமர்சனம்

சிவாவாக ரன்பீர் கபூர், இஷாவாக ஆலியா பட். ரியல் லைஃப் ஜோடி என்பதாலோ என்னவோ, சற்றே சுமாரான காதல் காட்சிகளைக்கூட இவர்களின் அற்புதமான கெமிஸ்ட்ரி மீட்டெடுக்கிறது. துடிப்பான இளைஞனாக, அதே சமயம் தனக்குள் இருக்கும் சக்திகள், அது குறித்த கேள்விகள் என அதற்குரிய குழப்பமான முகத்துடனே வலம் வருகிறார். கேள்விகளுக்கு விடைகாண எந்த எல்லை வரையும் போகும் அவரின் கதாபாத்திர கிராப் ஒரு பக்கா சூப்பர்ஹீரோவுக்கான நல்லதொரு ஆரம்ப அத்தியாயம் (Origin Story). சுற்றியும் பல வகையான சக்திகளுடன் உலாவரும் சூப்பர்ஹீரோக்களுக்கு மத்தியில் சாதாரண மனுஷியாக ஆலியா பட். என்றாலும், கதையை நகர்த்தும் கதாபாத்திரமாகப் படம் நெடுக வருகிறார். சுமாரான வசனங்கள், காட்சிகளைக்கூட தன் குறும்பால் மெருகேற்றியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here