Home சினிமா செய்திகள் comedy actor turn chief minister in india – தமிழ் News

comedy actor turn chief minister in india – தமிழ் News

0
comedy actor turn chief minister in india – தமிழ் News

[ad_1]

எம்ஜிஆர், என்டிஆர் உள்பட ஹீரோக்கள் அரசியலில் களமிறங்கி முதலமைச்சராக பதவி ஏற்று உள்ளார்கள் என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் ஒரு காமெடி நடிகர் பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்று விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

5 மாநில தேர்தல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மான் ஒரு காமெடி நடிகர் என்பது தான் அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது.

நடிகர் மட்டுமின்றி பாடகர், பேச்சாளர், சமூக ஆர்வலர் என பன்முகம் இவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று அதன்பின் தனது திறமையை படிப்படியாக வளர்த்துக் கொண்டு திரைப்படங்களில் காமெடி நடிகரானார். பின்னர் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வித்தியாசமான அரசியல் பார்வையால் ஈர்க்கப்பட்ட பகவந்த் மான், அவரது கட்சியில் இணைந்தார் .

கடந்த 2014ஆம் ஆண்டு அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்பி என்ற புகழையும் பகவந்த் மான் பெற்றார்.

இந்த நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாளில் அவர் அம்மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். முதலமைச்சர் என்றால் சாமானியர் என்று தான் பொருள் என்று கூறியுள்ள அவர், தனது முதலமைச்சர் பதவி ஏற்பு விழா ராஜ்பவனில் நடக்காது என்ற கிராமத்தில்தான் நடக்கும் என்றும் அவர் கூறியிருப்பது அபாரமான ஆரம்பமாக உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here