Home Sports Cricket Deepti Sharma:`ஓயாத விவாதம்’ – தீப்தி சர்மா செய்த ரன் அவுட் முறையற்றதா? ‘| Deepti Sharma’s Controversial Run Out is the current hot topic pof cricket

Deepti Sharma:`ஓயாத விவாதம்’ – தீப்தி சர்மா செய்த ரன் அவுட் முறையற்றதா? ‘| Deepti Sharma’s Controversial Run Out is the current hot topic pof cricket

0
Deepti Sharma:`ஓயாத விவாதம்’ – தீப்தி சர்மா செய்த ரன் அவுட் முறையற்றதா? ‘| Deepti Sharma’s Controversial Run Out is the current hot topic pof cricket

இந்த விஷயத்தில் ஆண்டர்சனும் ப்ராடும் சீனியர் பௌலர்களாக இந்த வகையிலான ரன் அவுட்டின் தேவையை உணர்ந்து ஒரு பௌலரின் பக்கம்தான் நின்றிருக்க வேண்டும். அதுதான் நியாயமும் கூட. ஆனால், சாதனை மேல் சாதனை செய்த பந்து வீச்சாளர்கள் இந்த விஷயத்தில் மட்டும் ஒரு அராஜமிக்க பேட்டரின் மனநிலையிலிருந்து கருத்து கூறியிருப்பதை ஜீரணிக்க முடியவில்லை. தேசப்பற்றின் காரணமாக ஏதேதோ கருத்துகளை கூறிக்கொண்டிருக்கின்றனர் என எண்ணிக்கொள்வோம் . 2019 உலகக்கோப்பையை இங்கிலாந்து எப்படி வென்றது? அதுமட்டு ஸ்பிரிட் ஆஃப் தி கேமுக்குள் அடங்குமா? என ஆண்டர்சனையும் ப்ராடையும் ரசிகர்கள் பந்தாடி வருகின்றனர்.

இந்த சர்ச்சையில் அஷ்வின், சேவாக், கைஃப் போன்றோர் தீப்தி சர்மாவுக்கு ஆதரவாக கருத்து கூறியிருக்கின்றன. பல முறை எச்சரித்த பிறகே டீனே அவுட் ஆக்கினோம் என தீப்தி கூறியிருக்கிறார். இந்தியா சார்பில் எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என இங்கிலாந்து கேப்டன் கூறியிருக்கிறார். யார் சொல்வது உண்மை என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். அதேநேரத்தில், ரன் அவுட் ஆக்கப்பட்ட சார்லி டீனே இந்த விஷயத்தை ரொம்பவே பக்குவமாக கையாண்டிருக்கிறார். தீப்தி தன்னை ரன் அவுட் ஆக்கியதுமே களத்தில் எந்த சச்சரவுகளிலும் ஈடுபடாமல் நடுவரின் முடிவை ஏற்று இயல்பாக வெளியேறியிருந்தார். மேலும், தன்னுடைய தவற்றையும் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

என சார்லி டீன் தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். முழுமையாக 22 வயது கூட நிரம்பாத இளம் வீராங்கனை. அவருக்கு இருக்கும் புரிதல் கூட பெரும் அனுபவமிக்க வீரர்களுக்கு இல்லை என்பதுதான் சோகம்.

ஒரு புரிதலுக்காக மட்டுமே இங்கே ‘மன்கட்’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அக்டோபர் 1 முதல் இந்த வகையிலான அவுட்களை ‘ரன் அவுட்’ என்றே குறிப்பிட வேண்டும் என ஐ.சி.சி கூறியிருக்கிறது. ஆக இனி நாமும் அப்படியே அழைப்போம்.

இந்த ரன் அவுட் சர்ச்சையானதில் ஒரு நல்ல விஷயமும் நடந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here