Home சினிமா செய்திகள் Dhanush and cooku with comali baba basker are classmates viral video – தமிழ் News

Dhanush and cooku with comali baba basker are classmates viral video – தமிழ் News

0

[ad_1]

’குக் வித் கோமாளி நிகழ்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் மாஸ்டர் பாபா பாஸ்கர் என்பதும் இவர் அந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை தாக்குப்பிடித்து ரசிகர்களின் மனதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி பாபா பாஸ்கரும் நடிகர் தனுஷூம் ஒன்றாக படித்தவர்கள் என்று செய்திகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. ஆனால் இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம் என்றும் தனுஷை விட இரண்டு வயது பாபா பாஸ்கர் மூத்தவர் என்றும் பின் எப்படி ஒன்றாக படித்திருக்க முடியும்? என்றும் ஒரு சிலர் கேள்வி எழுப்பினர்

இந்த நிலையில் இதற்கு தனுஷின் பழைய வீடியோ ஒன்று பதில் அளித்துள்ளது. தனுஷ் நடித்த ’கொடி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் ’நானும் பாஸ்கரும் எட்டாவது வரை ஒன்றாக படித்தோம்’ என்று கூறியுள்ளார். அதனை அருகிலிருந்த பாபா பாஸ்கர் ஒப்புக் கொள்வது போல் தலையாட்டினார். இந்த வீடியோவே தனுஷூம் பாபா பாஸ்கரும் ஒன்றாக படித்தவர்கள் என்பதற்கு சான்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ் நடித்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு பாபா பாஸ்கர் தான் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here