Home சினிமா செய்திகள் filmcriticanddirectormaheshkathipassedaway – தமிழ் News – IndiaGlitz.com

filmcriticanddirectormaheshkathipassedaway – தமிழ் News – IndiaGlitz.com

0
filmcriticanddirectormaheshkathipassedaway – தமிழ் News – IndiaGlitz.com

[ad_1]

தெலுங்கு திரையுலகில் திரைப்பட விமர்சகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர் என பல் திறமைகள் கொண்டவராக விளங்கி வந்தவர் தான் மகேஷ் காத்தி. அண்மையில் தனது காரில் நெல்லூரில் இருந்து, ஹைதராபாத்திற்கு சென்ற போது, லாரி மோதி விபத்திற்கு உள்ளானார். விபத்தில் படுகாயமடைந்த மகேஷ், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 வாரங்களாக தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனில்லாமல் காலமானார். இவர் உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகேஷ் காத்தி தெலுங்கு திரையுலகில் பிரபல திரைப்பட விமர்சகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி வந்தார். ‘பெசராட்டு’ என்ற படத்தையும் இயக்கியுள்ள இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். நம் சமூகம் வளர்ச்சியடைய, அறிவியல் ரீதியான பார்வை மட்டுமே சிறந்தது என்று கூறும் மகேஷ், ராமர், சீதா குறித்து விமர்சித்ததில், சிறைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இறப்பிற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here