Home சினிமா செய்திகள் Grammy Awards: கிராமி மேடையில் நமஸ்தே; விருதை வென்ற இந்தியர்கள் ரிக்கி கேஜ் மற்றும் ஃபால்குனி ஷா! | The 64th Grammy Awards: Award-winning Indians Ricky Kej and Falguni Shah

Grammy Awards: கிராமி மேடையில் நமஸ்தே; விருதை வென்ற இந்தியர்கள் ரிக்கி கேஜ் மற்றும் ஃபால்குனி ஷா! | The 64th Grammy Awards: Award-winning Indians Ricky Kej and Falguni Shah

0
Grammy Awards: கிராமி மேடையில் நமஸ்தே; விருதை வென்ற இந்தியர்கள் ரிக்கி கேஜ் மற்றும் ஃபால்குனி ஷா! | The 64th Grammy Awards: Award-winning Indians Ricky Kej and Falguni Shah

[ad_1]

இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்ஜின் ‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ என்ற ஆல்பத்திற்காக 2015-ல் அவருக்கு கிராமி விருது வழங்கப்பட்டது. இதையடுத்து 2022-ல் அவரது ‘டிவைன் டைட்ஸ் (Divine Tides)’ என்ற ஆல்பம் ‘சிறந்த நியூ ஏஜ் ஆல்பம்’ என்ற கிராமி விருதை வென்றுள்ளது. ராக் இசை கலைஞர் ஸ்டீவர்ட் கோப்லேண்டுடன் (Steward Copeland) இணைந்து விருதைப் பெற்ற ​​ரிக்கி கேஜ், பார்வையாளர்களைப் பார்த்து ‘நமஸ்தே’ என்று கூறி வாழ்த்தினார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், “எங்கள் டிவைன் டைட்ஸ் ஆல்பத்திற்கு கிராமி விருதை வழங்கியதற்கு நன்றி. இந்த விருதை வாழும் லெஜெண்ட் ஸ்டீவர்ட் கோப்லேண்டுடன் இணைந்து வாங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இது எனது 2வது கிராமி விருது மற்றும் ஸ்டீவர்ட்டின் 6வது விருது” என்று பதிவிட்டிருந்தார்.

கிராமி விருதுகள்

கிராமி விருதுகள்

இதையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல பாடகியான ஃபால்குனி ஷா (Falguni Shah) அவர்களின் ‘எ கலர்ஃபுல் வேர்ல்டு’ (A Colourful World) என்ற ஆல்பம் ‘சிறந்த குழந்தைகள் இசை ஆல்பம்’ என்ற விருதைப் பெற்றுள்ளது. ரெக்கார்டிங் அகாடமியால் ஒரே பிரிவில் இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்திய வம்சாவளி பெண்மணி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மெல்லிசைகளையும் மேற்கத்திய ஒலிகளையும் கலப்பதில் பெயர் பெற்ற இவர், ஏ.ஆர்.ரஹ்மான், பிலிப் கிளாஸ், ராப்பர் வைக்லெஃப் ஜீன், பாடகர்-பாடலாசிரியர் ரிக்கி மார்ட்டின் மற்றும் ப்ளூஸ் டிராவலர் இசைக்குழு போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இது பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், “இன்று நடந்த மேஜிக்கை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. ‘எ கலர்ஃபுல் வேர்ல்டு’ ஆல்பத்தில் பணியாற்றிய அனைத்து சிறந்த கலைஞர்களின் சார்பாக ஒரு சிலையை (விருது) வீட்டிற்கு எடுத்துச் செல்வது எனக்கு பெரும் மரியாதையாக உள்ளது. இந்த மகத்தான அங்கீகாரத்திற்காக நாங்கள் பணிவுடன் ரெக்கார்டிங் அகாடமிக்கு நன்றி கூறுகிறோம். நன்றி!” என்று பதிவிட்டிருந்தார்.

[ad_2]

Source link

cinema.vikatan.com

மு.பூபாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here