HomeSportsவிளையாட்டு செய்திகள்Healthcare: small percentage ofelderly have Health Insurance and can’t bear costs |...

Healthcare: small percentage ofelderly have Health Insurance and can’t bear costs | Healthcare: கோவிட்டால் முதியோர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?


சென்னை: இந்தியாவில் 19% வயதானவர்களுக்கு மட்டுமே சுகாதார காப்பீடு உள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் மெட்ராஸ் ஐ.ஐ.டி நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளது. எனவே, சுகாதாரத்துறையில் அரசு அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  

80 வயதிற்கு மேற்பட்ட 27.5% பேர் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர முடியாதவர்கள் என்றும், 70% முதியவர்கள் பொருளாதார ரீதியாக பிறரை சார்ந்திருப்பதையும் ஐ.ஐ.டியின் ஆய்வு வெளிப்படுத்துகிறது.

முதியவர்களுக்கு ஏற்படும் COVID-19 நோயின் தாக்கத்தைத் தணிக்க பொது சுகாதாரத்துறையில் அரசு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் (Indian Institute of Technology Madras) நடத்திய ஆய்வில், கூறப்பட்டுள்ளது. கோவிட் -19ஐ தவிர்க்க, உடல் ரீதியில் விலகியிருப்பது, தனிமைப்படுத்தல் போன்ற நடைமுறைகளால், முதியவர்களுக்கு மனச்சோர்வு மற்றும் பிற சிக்கல்கள் ஏற்படலாம் என்று ஆய்வறிக்கை அறிவுறுத்துகிறது.

Also Read | தமிழ் ‘குடி’ மகன்களின் சாதனை: ஒரே நாளில் ₹164.87 கோடியை கடந்த மது விற்பனை

வயதானவர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்கள் பொதுவாக ஏற்படுபவை. அதிலும், சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்குபவர்கள், இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். லாக்டவுனில் இளைய தலைமுறையினரைச் சார்ந்திருப்பது, வெளியிடங்களுக்கு சென்று வர முடியாதது போன்றவை வழக்கமான ஆரம்ப சுகாதாரத்துக்கான அணுகல் மற்றும் பிற நோய்களுக்கான அத்தியாவசிய பராமரிப்பை பாதிக்கிறது.

“வயதானவர்களில் 18.9% பேருக்கு மட்டுமே சுகாதார காப்பீடு உள்ளது, எனவே ஆரோக்கியத்திற்காக பெரிய செலவுகளைச் செய்ய முடியாது. 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களில் 27.5% பேர் அசைய முடியாவர்கள். 70% பெரியவர்கள் ஓரளவு அல்லது முழுமையாக நிதி ரீதியாக மற்றவர்களைச் சார்ந்தவர்கள்” என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு (NSS) 2017-18 இன் 75 வது சுற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

ஐ.ஐ.டி மெட்ராஸின், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் வி.ஆர்.  முரளீதரன் மற்றும் ஐ.ஐ.டி ஜோத்பூரின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் அலோக் ரஞ்சன் தலைமையில் இந்த என்.எஸ்.எஸ் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படது. இந்த கணக்கெடுப்பில் 113,823 குடும்பங்கள் மற்றும் 555,115 நபர்கள் கலந்துக் கொண்டனர். 

Also Read | Ration Update: ரூ.2000 மளிகைப் பொருட்கள் தொகுப்பு இன்று முதல் விநியோகம்

8077 கிராமங்கள் 6181 நகர்ப்புறங்களில் இருந்து தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடையே இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.   International journal Globalization and Health என்ற சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், சுகாதார நிலை மற்றும் நாடு முழுவதும் உள்ள முதியோரின் சுகாதார அணுகல் ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைக் காட்டியது.

வசிக்கும் இடம், பாலினம், சமூகக் குழு (சாதி), திருமண நிலை, வாழ்க்கை நிலை, உயிர் குழந்தைகளுடன் வசிப்பது மற்றும் பொருளாதார சார்பு போன்ற காரணிகள் வயதானவர்களின் சுகாதாரத்தை பாதிக்கிறது. கோவிட் பாதிப்பால் பலர் சிகிச்சைகளை ஒத்திப்போடுகின்றனர், மருந்துகள் கிடைக்காதது போன்றவை தற்போது பெரிய சுகாதார சவாலாக எழுந்துள்ளது.

தற்போதைய தொற்றுநோயிலிருந்து படிப்பினைகளை கற்றுக் கொள்வதால், வயதானவர்களின் உடல் மற்றும் மன நலனுக்கு தீங்கு விளைவிப்பதை குறைக்குக்ம் என்று டாக்டர் அலோக் ரஞ்சன் கருதுகிறார். முதியோர் மத்தியில் குறிப்பாக தமிழ்நாட்டில் விரிவான கணக்கெடுப்புகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பொது சுகாதார அமைப்பில் இதுவரை இல்லாத திறமையான புனர்வாழ்வு பராமரிப்பை வடிவமைக்க உதவியாக இருக்கும்.

Also Read | Tamil Nadu: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Must Read