Home Sports விளையாட்டு செய்திகள் IND v SA: `ஆரம்பிக்கலாங்களா…’ ஒரு பிடி பிடித்த தினேஷ் கார்த்திக்; தொடரை சமன் செய்தது இந்தியா! | Timely Blast from Dinesh Karthik with bat helped India to get a much needed victory against South Africa

IND v SA: `ஆரம்பிக்கலாங்களா…’ ஒரு பிடி பிடித்த தினேஷ் கார்த்திக்; தொடரை சமன் செய்தது இந்தியா! | Timely Blast from Dinesh Karthik with bat helped India to get a much needed victory against South Africa

0
IND v SA: `ஆரம்பிக்கலாங்களா…’ ஒரு பிடி பிடித்த தினேஷ் கார்த்திக்; தொடரை சமன் செய்தது இந்தியா! | Timely Blast from Dinesh Karthik with bat helped India to get a much needed victory against South Africa

[ad_1]

27 பந்துகளில் 55 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 203. அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே அவுட்டும் ஆகியிருந்தார். இடையில் ஹர்திக் பாண்டியாவும் கொஞ்சம் நின்று 31 பந்துகளில் 46 ரன்களை எடுத்து அவுட் ஆகியிருந்தார். கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 113 ரன்களை அடித்திருந்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 169. இந்த ஸ்கோரை எட்டியதற்கு மிக முக்கிய காரணம் தினேஷ் கார்த்திக்கும் ஹர்திக் பாண்டியாவுமே.

டீகாக் மீண்டும் ப்ளேயிங் லெவனுக்குத் திரும்பியிருப்பதால் கொஞ்சம் உற்சாகத்துடனேயே தென்னாப்பிரிக்கா பேட்டிங்கைத் தொடங்கியது. ஆனால், அந்த உற்சாகம் பவர்ப்ளே முடியும் வரைக்குமே கூட நிலைக்கவில்லை. புவனேஷ்வர் குமாரும் ஆவேஷ் கானும் முதல் ஸ்பெல்லிலேயே ஷார்ட் பால்களாக வீசித் திணறடித்தனர். புவனேஷ்வர் குமாரின் ஓவரில் ஹெல்மெட்டில் அடி வாங்கிய பவுமா அதே ஓவரில் ஒரு ரன்னுக்காக புழுதி பறக்க டைவ்வும் அடித்து விழுந்திருப்பார். இந்த அடிகளால் காயப்பட்ட பவுமா இனியும் முடியாதென ரிட்டையர்டு ஹர்டாகி வெளியே சென்றார். நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட டீகாக், பிரிட்டோரியஸின் ஒருங்கிணைப்பற்றத் தன்மையால் ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே ஆவேஷ் கானின் பந்தில் பிரிட்டோரியஸூம் எட்ஜ் ஆகி வெளியேறியிருப்பார். பவுமாவின் ரிட்டையர்டு ஹர்ட்டோடு சேர்த்தால் பவர்ப்ளேக்குள்ளாகவே 3 முக்கிய விக்கெட்டுகள் காலி. இந்தச் சரிவிலிருந்து தென்னாப்பிரிக்க அணியால் கடைசி வரை மீள முடியவில்லை. மிடில் ஓவர்களில் வீசிய ஸ்பின்னர்கள் சஹால், அக்சர் இருவருமே கட்டுக்கோப்பாக வீசினர். சஹால் ரிஸ்க் எடுத்து ஸ்லாட்டிலேயே தூக்கி வீசிக்கொண்டே இருந்தார். இதற்கு பலனாக க்ளாசெனின் விக்கெட் lbw மூலம் கிடைத்தது. கில்லர் மில்லரை Top of the off stump லைனில் ஹர்சல் படேல் போல்டாக்கி வெளியேற்றினார்.

[ad_2]

Source link

sports.vikatan.com

உ.ஸ்ரீ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here