Home Sports விளையாட்டு செய்திகள் IPL 2016: கையிலிருந்த `ஈ சாலா கப் நம்தே’ வாய்ப்பைக் கோட்டைவிட்ட ஆர்.சி.பி! | On This Day | IPL 2016 Memories: RCB missed the best chance of winning their first IPL title

IPL 2016: கையிலிருந்த `ஈ சாலா கப் நம்தே’ வாய்ப்பைக் கோட்டைவிட்ட ஆர்.சி.பி! | On This Day | IPL 2016 Memories: RCB missed the best chance of winning their first IPL title

0
IPL 2016: கையிலிருந்த `ஈ சாலா கப் நம்தே’ வாய்ப்பைக் கோட்டைவிட்ட ஆர்.சி.பி! | On This Day | IPL 2016 Memories: RCB missed the best chance of winning their first IPL title

[ad_1]

பிளேஆஃப்ஸ் போட்டிகளுக்கு பெங்களூரு தகுதி பெற வேண்டும் என்றால் கடைசி நான்கு லீக் போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஆனால் அவ்வளவு பெரிய தடைக்கல்லை மிகவும் எளிதாக புரட்டிப்போட்டு புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது அந்த அணி. முதல் குவாலிஃபையர் போட்டியில் டாப் ஆர்டர் சரிந்தாலும் தனியாளாக நின்று அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார் டி வில்லியர்ஸ். மறுபுறம் ஹைதராபாத் அணி, வார்னர் என்ற ஒரே ஒரு குதிரையின் மேல் மட்டும் பந்தயம் கட்டி ஃபைனல் வரை வந்தது.

ஹைதராபாத் அணிக்கு வார்னர்தான் மிகப்பெரிய பலம். அந்தத் தொடரில் 848 ரன்களை எடுத்திருந்தார் வார்னர். அவரை விரைவாக அவுட்டாக்கினால் போதும் என்பதுதான் ஆர்.சி.பி அணியின் ஒரே குறிக்கோளாக அப்போது இருந்திருக்கும். சின்னசாமி மைதானத்தில் ஆட்டம் தொடங்க, டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

சற்று மெதுவாக இன்னிங்சை தொடங்கிய ஹைதராபாத் அணியினர், வாட்சன் வீசிய 5வது ஓவரில் 19 ரன்களும், கெயில் வீசிய ஆறாவது ஓவரில் 13 ரன்களும் எடுத்து தங்களது அதிரடியை ஆரம்பித்தனர். தவான் சற்று மெதுவாக ஆடினாலும் வார்னர் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். 14-வது ஓவரில் வார்னர் அவுட் ஆன பிறகுதான் பெங்களூர் அணியினரின் முகத்தில் உற்சாகமே பிறந்தது. ஆனால் அந்த உற்சாகத்தை அடக்க ஹைதராபாத் வீரர் யாராவது வருவார் என்று நீங்கள் நினைத்தால், ஆர்.சி.பி யின் வரலாறு உங்களுக்குத் தெரியவில்லை என்றே அர்த்தம். இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் பெங்களூர் அணி விளையாடும் போதெல்லாம் அவர்களின் வீரர் ஒருவரே அந்த அணியின் கதையை முடித்து விடுவார். அந்த உன்னதமான பொறுப்பை அன்று எடுத்துக்கொண்வர் வாட்சன். தான் வீசிய 4 ஓவர்களில் 61 ரன்களை வாரி வழங்கி ஹைதராபாத் அணியை 208 ரன்கள் எடுக்கவிட்டு ஆனந்தக் கண்ணீருடன் அழகு பார்த்தார் வாட்சன்.

[ad_2]

Source link

sports.vikatan.com

வில்சன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here