Home Sports விளையாட்டு செய்திகள் IPL 2022: கொல்கத்தாவைத் தொடணும்னா முதல்ல உமேஷைத் தாண்டனும்! – சீறும் விதர்பா எக்ஸ்பிரஸ் – Umesh Yadav’s splendid performance in IPL earned him a Purple Cap

IPL 2022: கொல்கத்தாவைத் தொடணும்னா முதல்ல உமேஷைத் தாண்டனும்! – சீறும் விதர்பா எக்ஸ்பிரஸ் – Umesh Yadav’s splendid performance in IPL earned him a Purple Cap

0
IPL 2022: கொல்கத்தாவைத் தொடணும்னா முதல்ல உமேஷைத் தாண்டனும்! – சீறும் விதர்பா எக்ஸ்பிரஸ் – Umesh Yadav’s splendid performance in IPL earned him a Purple Cap

[ad_1]

எல்லாம் முடிந்ததென சோர்ந்து போய் மூலையில் கிடக்கும் ஆட்களுக்கு கூட எழுச்சியூட்டும் வகையில் புதிய பாசிட்டிவ் டானிக்காக உருவெடுத்திருக்கிறார் உமேஷ் யாதவ். சுற்றத்தினரால் நாம் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாத சமயத்தில் யாருமே எதையுமே நம்மிடமிருந்து எதிர்பார்த்திடாத தருணத்தில் எதோ ஒரு தரமான சம்பவத்தை நிகழ்த்திக் காட்டினால் எப்படியிருக்கும்? தூற்றியோர் அத்தனை பேரும் வாயடைத்து போவார்கள். உமேஷ் யாதவ் விஷயத்தில் இப்போது அதுதான் நடந்திருக்கிறது.

இந்த சீசன் தொடங்கி முழுமையாக ஒரு வாரம் கூட இன்னும் முடியவில்லை. உமேஷ் யாதவ் அதற்குள்ளேயே தன்னுடைய முத்திரையை அழுத்தமாக பதித்துவிட்டார்.

மூன்றே போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். Purple Cap இப்போது உமேஷ் யாதவின் தலையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

ஆர்சிபி, ஐ.பி.எல் வரலாற்றில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட அணிகளுள் ஒன்று. உமேஷ் யாதவ், அந்த ஆர்சிபியில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட வீரர்களில் ஒருவர். டெத் ஓவர்களில் உமேஷ் யாதவ் அதிக ரன்களை வழங்கியதால் டிண்டா அகாடெமியை சேர்ந்தவர் என வசைபாடப்பட்டார். கோலியும் ஏபிடியும் உயிரைக் கொடுத்து அடிக்கும் ரன்களை போகிற போக்கில் ஒன்றிரண்டு ஓவர்களிலேயே வாரிக்கொடுத்துவிடும் ஜோக்கராகத்தான் உமேஷ் யாதவ் ரசிகர்களால் பார்க்கப்பட்டார். ஒரு கட்டத்தில் ஐ.பி.எல் அணிகளுமே ரசிகர்ளின் அந்த ட்ரோலிங் கண்களோடு உமேஷ் யாதவை பார்க்கத் தொடங்கினர். உமேஷுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்த பெங்களூரு அணி அவரை வெளியேற்றியது. மீண்டும் தன்னுடைய பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸுக்கே வந்து சேர்ந்தார். ஆனால், இங்கேயும் அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. பென்ச்சிலேயே வைக்கப்பட்டார். ஏமாற்றம் தொடர்கிறது. ரீட்டெயின் செய்யப்படும் வீரர்களின் பட்டியலில் இடம்பிடிக்கவெல்லாம் உமேஷ் யாதவிற்கு ஒரு துளி வாய்ப்பு கூட இருந்திருக்கவில்லை.

[ad_2]

Source link

sports.vikatan.com

உ.ஸ்ரீ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here