Home Sports விளையாட்டு செய்திகள் Irregularities in appointment in assisstant loco pilot candidates of Gorakhpur RRB and Southern Railways | ரயில்வே பணிகள் : உத்தரபிரதேசத்துக்கு in, தமிழாட்டுக்கு out?

Irregularities in appointment in assisstant loco pilot candidates of Gorakhpur RRB and Southern Railways | ரயில்வே பணிகள் : உத்தரபிரதேசத்துக்கு in, தமிழாட்டுக்கு out?

0
Irregularities in appointment in assisstant loco pilot candidates of Gorakhpur RRB and Southern Railways | ரயில்வே பணிகள் : உத்தரபிரதேசத்துக்கு in, தமிழாட்டுக்கு out?

[ad_1]

இந்திய ரயில்வேயின் சமீபத்திய பணி நியமன ஆணை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. உத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது இந்திய ரயில்வே. இது பல தரப்பிலிருந்து பல வித விமர்சனங்களை ஈர்த்து வருகிறது. 

2018 ஆம் ஆண்டு ரயில்வே (Indian Railway) சில காலியிடங்களுக்கு ஆட்கள் தேவை என விண்ணப்பங்களை கோரியது. ரயில்வே வாரியம் உதவி ரயில் ஓட்டுனர் காலியிடங்களுக்கும் டெக்னீசியன் காலியிடங்களுக்கும் விண்ணப்பங்களை கோரியிருந்தது. தெற்கு ரயில்வே  761 உதவி ரயில் ஓட்டுநர்களுக்கான காலியிடங்களுக்கான விண்ணப்பங்களை கோரி இருந்தது. 

இந்த தேர்வை எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள் ஒரு பகுதியின் ரயில்வேக்கு தான் விண்ணப்பிக்க வேண்டும். எந்த வட்டத்தின் ரயில்வேக்கு தேர்வு எழுதுகிறார்களோ அந்த ரயில்வேக்கு தான் விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வேறு ரயில்வேக்கு அவர்கள் நியமிக்கப்பட கூடாது. 

ALSO READ: தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்: 15 லட்சம் டோஸ் செலுத்த இலக்கு

எனினும், உத்தரப் பிரதேசத்திலுள்ள (Uttar Pradesh) கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை தெற்கு ரயில்வேயில் உள்ள 51 இடங்களில் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், அவர்களது மதிப்பெண்கள், தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை விட குறைவாக உள்ளது. 

மற்ற வட்டங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேயில் நியமிப்பது சட்ட விரோதமான செயலாக பலரால் பார்க்கப்படுகின்றய்து. இந்த செயல் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. 

இது குறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனும் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். பல விஷயங்களைப் பற்றி எடுத்துக்கூறிய அவர், ரயில்வே அமைச்சர் உடனே தலையிட்டு கோரக்பூர் விண்ணப்பதாரர்களை  கோரக்பூர் திருப்பி அனுப்பவும் தெற்கு ரயில்வேயின் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை அந்த உதவி ஓட்டுனர் காலியிடங்களில் நிரப்பவும் கோரியுள்ளார். 

ALSO READ: தமிழ்நாட்டில் மேலும் 6 சுங்கச்சாவடிகளா? மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here