Home சினிமா செய்திகள் KRK Review: காத்துவாக்குல ‘காமெடி’ இருக்கு ஓகே… காதல் எங்க பாஸ்?! | Vijay Sethupathi’s Kaathuvaakula Rendu Kadhal movie review

KRK Review: காத்துவாக்குல ‘காமெடி’ இருக்கு ஓகே… காதல் எங்க பாஸ்?! | Vijay Sethupathi’s Kaathuvaakula Rendu Kadhal movie review

0
KRK Review: காத்துவாக்குல ‘காமெடி’ இருக்கு ஓகே… காதல் எங்க பாஸ்?! | Vijay Sethupathi’s Kaathuvaakula Rendu Kadhal movie review

[ad_1]

சிறுவயது முதலே தன்னை துரதிர்ஷ்டசாலியாக நினைத்து தன் தாயிடம் இருந்தே விலகி வாழ்கிறார் ராம்போ. பகலில் கேப் டிரைவர், இரவில் பப்பில் பவுன்சர் என மாறி மாறி உழைக்க, அவரின் அந்தப் பணிகளின் வாயிலாகவே அறிமுகமாகிறார்கள் கண்மணியும், கதிஜாவும். சட்டென ராம்போவின் வாழ்வில் எல்லாமே நல்லதாய் நடக்க, இருவரையுமே காதலிக்கத் தொடங்குகிறார். யார், யாருடன் இணைந்தார்கள், இறுதியில் மூவரும் எடுக்கும் முடிவு என்ன என்பதை காமெடி கொஞ்சம் தூக்கலாகக் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

காத்து வாக்குல ரெண்டு காதல்! | Kaathuvakkula Rendu Kadhal

காத்து வாக்குல ரெண்டு காதல்! | Kaathuvakkula Rendu Kadhal

ராம்போ – கண்மணி – கதிஜா என வழக்கமான முக்கோணக் காதல் கதைதான். ராம்போவாக விஜய் சேதுபதி, தனக்குரிய நக்கல் நையாண்டிகள், துள்ளலான உடல்மொழி என அதே விஜய் சேதுபதி. ஆனாலும் ரசிக்க வைக்கிறார். என்ன, கடைசிவரை அவரின் சீரியஸான முகத்தையே காட்டாமல் ஜாலிமுகத்தையே காட்டுவது கதையின் கனத்தைக் குறைக்கிறது. கண்மணியாக நயன்தாரா, தங்கை மற்றும் நோயால் அவதியுறும் தம்பியுடன் பொறுப்பான அக்காவாக வலம் வருகிறார். அவரின் பின்கதையும், ராம்போவுடன் அவர் காதலில் விழும் தருணங்களும் சட்டென காத்துவாக்குல எழும் சின்னப் புத்துணர்ச்சியாய் கடந்து போகின்றன.

[ad_2]

Source link

cinema.vikatan.com

விகடன் டீம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here