Home Sports விளையாட்டு செய்திகள் MP Su Venkatesan questions Modi govt on connection with science vs Hindi | அறிவியல் முனைப்புக்கும், இந்திக்கும் என்ன சம்பந்தம்? சு.வெங்கடேசன் கேள்வி

MP Su Venkatesan questions Modi govt on connection with science vs Hindi | அறிவியல் முனைப்புக்கும், இந்திக்கும் என்ன சம்பந்தம்? சு.வெங்கடேசன் கேள்வி

0
MP Su Venkatesan questions Modi govt on connection with science vs Hindi | அறிவியல் முனைப்புக்கும், இந்திக்கும் என்ன சம்பந்தம்? சு.வெங்கடேசன் கேள்வி

[ad_1]

புது டெல்லி: அறிவியல் முனைப்புக்கும், இந்திக்கும் என்ன சம்பந்தம  என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் (Lokshaba member) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான சு.வெங்கடேசன் அவர்கள் ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். 

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா (KVPY) என்கிற திட்டத்தின் அடிப்படையில் அறிவியல் முனைப்புள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

+1 , +2 மாணவர்களுக்கு (Class 12 students) ஆன் லைன் தேர்வுகள் (Online exams) நடத்தப்பட்டு உதவித் தொகைக்கு தகுதி உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டிற்கு உதவித் தொகை மற்றும் கொடையாக ரூ 80,000 இல் இருந்து ரூ 1,12,000 வழங்கப்படும். இது போன்ற அறிவியல் முனைப்பை மாணவர்கள் மத்தியில் வளர்க்கிற திட்டங்கள் நல்லதுதான். ஆனால் தேர்வு முறை எல்லோருக்கும் நீதி தருவதாக, வாய்ப்பு வழங்குவதாக, தேர்வு எழுதுகிற சூழல் பொருந்தி வருவதாக இருக்கிறதா என்பதே கேள்வி? எனக்கூறி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் மூன்று கோரிக்கைகளை எழுப்பிய  உள்ளார் எம்.பி. சு.வெங்கடேசன்:

அதில் ஒன்று, திறனறித் தேர்வு இரண்டு மொழிகளில் வினாத் தாள் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மட்டுமே, மாநில மொழிகளில் +1, +2 கல்வி பயிலும் மாணவர்கள் என்ன செய்வார்கள்?

ALSO READ | மதுரையை வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும்!

இந்திக்கு என்ன சம்பந்தம்?

இந்தியில் (Hindi) எழுதலாம்… ஆனால் தமிழில் எழுத முடியாது என்றால் அது சமதள ஆடுகளத்தை எப்படி உறுதி செய்யும்? அறிவியல் முனைப்பிற்கும் மொழிக்கும் என்ன சம்பந்தம்? அறிவியல் முனைப்பிற்கும் ஆங்கிலம், இந்திக்கு என்ன சம்பந்தம்? தேர்வுக்கு முன்பே கதவை அடைக்கிற பாரபட்சம் இல்லையா? தமிழ் வழி மாணவர்கள் தடை தாண்டும் ஒட்டமும், இந்தி தெரிந்த மாணவர்கள் அதே ஓடு பாதையில் தடையில்லாமல் ஓட்டமும் என்றால் என்ன போட்டி அது?

ஆகவே மாநில மொழிகளிலும் தேர்வை நடத்துங்கள் என்பது முதல் கோரிக்கை. நவம்பர் 7 அன்றுதான் தேர்வு என்பதால் கால அவகாசம் இருக்கிறது. அரசு மாநில (State Government) மொழிகளிலும் வினாத் தாள்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். எல்லோருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்.

இரண்டாவது, தேர்வுக்கான சூழல்:

தமிழ்நாட்டில் (Tamil Nadu) 9 தேர்வு மையங்கள். பக்கத்தில் உள்ள கேரள மாநிலத்தில் 13 மையங்கள். தமிழ்நாடு ஒப்பீட்டளவில் பெரிய மாநிலம். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள 9 மையங்களோடு இன்னும் 4 மையங்களாவது குறைந்த பட்சம் அறிவிக்கலாம். கோவிட் சூழலில் அதிக மையங்கள் தேவை. 

மூன்றாவது, விண்ணப்ப கட்டணம்:

பொதுப் பிரிவினருக்கு ரூ 1250, எஸ்.சி எஸ்.டி மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 625. இக் கட்டணத்தை தாங்க முடியாதவர்கள் அறிவியல் முனைப்பு கொண்டவர்கள் ஆயினும் தேர்வு எழுதக் கூட முடியாது. வெளியூர் சென்று தேர்வு எழுதுபவர்கள் தங்குமிடம், உடன் வருவோர் செலவுகள், உணவுச் செலவு, போக்குவரத்து கட்டணம் ஆகியனவற்றையும் தாங்க வேண்டுமே. ஆகவே விண்ணப்ப கட்டணம் குறைக்கப்பட வேண்டும். 

ALSO READ | தமிழக எம்பிக்கள் அனுப்பும் கடிதத்துக்கு இந்தியில் பதிலளிக்க கூடாது: நீதிமன்றம் உத்தரவு

செப்டம்பர் 6 விண்ணப்ப கடைசி தேதி என்பதால் அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் இதற்கு நல்ல பதிலை எதிர்பார்கிறோம் என்றும் அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here