Home Sports விளையாட்டு செய்திகள் Our ambition is to fulfill the promise Chief Minister MK Stalin responds to former Minister | வாக்குறுதியை நிறைவேற்றுவது தான் எங்கள் லட்சியம்: முன்னாள் அமைச்சருக்கு முதல்வர் பதில்

Our ambition is to fulfill the promise Chief Minister MK Stalin responds to former Minister | வாக்குறுதியை நிறைவேற்றுவது தான் எங்கள் லட்சியம்: முன்னாள் அமைச்சருக்கு முதல்வர் பதில்

0
Our ambition is to fulfill the promise Chief Minister MK Stalin responds to former Minister | வாக்குறுதியை நிறைவேற்றுவது தான் எங்கள் லட்சியம்: முன்னாள் அமைச்சருக்கு முதல்வர் பதில்

[ad_1]

சென்னை: கடந்த 13 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவை பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த நாள் வேளாண் துறைக்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் மூன்றாவது பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. இதில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், ஸ்டேன் சுவாமி, இளங்குமரனார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி உதயகுமார், “தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்கவே வெள்ளை அறிக்கை. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்த நினைக்கிறது திமுக” என அவர் குற்றம்சாட்டினார். 

இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin), ” தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்க மாட்டோம். அதிமுக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் பெரிய பட்டியலே உள்ளது. 

அதிமுக (AIADMK) ஆட்சியின்போது அக்கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நாங்களும் மறக்கவில்லை, நாட்டு மக்களும் மறக்கவில்லை. அதில் சிலவற்றை நீங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். ஆனால், பலவற்றை நிறைவேற்றவில்லை. அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்றார்.

ALSO READ | 100 நாட்கள் நிறைவு! சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் – முதல்வர் MKS உறுதி

அதனைத்தொடர்ந்து பேசிய அவர், இலவச செல்போன் தந்தீர்களா? ஆவின் பால் பாக்கெட் ரூ.25 என சொன்னீர்கள், கொடுத்தீர்களா? ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் கொடுப்போம் என சொன்னீர்கள், யாருக்காவது கொடுத்தீர்களா? குறைந்த விலையில் அவசியமான மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டதா? அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை என்னவானது? கோ-ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க ரூ.500 கூப்பன் வழங்கப்பட்டதா? என அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தார். 

இறுதியாக தமிழகத்தின் (Tamil Nadu) நிதிநிலை சரிசெய்யப்பட்டு தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் எங்கள் லட்சியம், பணி என உறுதியளித்தார்.

ALSO READ | தேர்தல் வாக்குறுதியான 1000 ரூபாய் குடும்பத்தலைவிகளுக்கு திட்டம் அமல்படுத்தப்படும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here